வெற்றிக்கு பிறகு மைதானத்தில் மோதிக்கொண்ட இந்திய வீரர்கள் – நடந்தது என்ன?

1 Min Read

2026 T20 உலகக்கிண்ணத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய போட்டிகள் கொழும்புவில் நடைபெற்றது. இதில், இந்திய அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

வெற்றிக்கு பின்னர், இந்திய வீரர்கள் மைதானத்தில் மோதிகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குல்தீப் யாதவை திட்டிய வீரர்கள்

போட்டியின் கடைசி ஓவரில், ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை பாகிஸ்தான் வீரர் ஷாகின் அப்ரிடி லாங்-ஆன் திசையில் அடிக்க, அங்கிருந்த குல்தீப் யாதவ் கையில் வந்து விழுந்த பந்தை கேட்ச் பிடிக்காமல் தவறவிட்டதோடு, எல்லைக்கோட்டைத் தாண்டி பந்து சிக்ஸருக்கும் சென்றது.

வெற்றிக்கு பிறகு மைதானத்தில் மோதிக்கொண்ட இந்திய வீரர்கள் - நடந்தது என்ன? | Hardik Pandya Suryakumar Yadav Scold Kuldeep Yadav

அப்போதே ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவை நோக்கி ஏதோ ஆவேசமாக கூறினார்.

போட்டி முடிந்த பின்னர், வீரர்கள் கைகுலுக்கி கொள்ளும் போது, ஹர்திக் பாண்டியா குல்தீப் யாதவிடம் வந்து ஆக்ரோஷமாக பேசினார்.

வெற்றிக்கு பிறகு மைதானத்தில் மோதிக்கொண்ட இந்திய வீரர்கள் - நடந்தது என்ன? | Hardik Pandya Suryakumar Yadav Scold Kuldeep Yadav

இதனை கவனித்த சக வீரர்களான திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியாவை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.

அணித்தலைவர் சூரியகுமார் யாதவும் குல்தீப் யாதவை நோக்கி ஆவேசமாக வார்த்தைகளை விட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *