சரவெடி காட்டிய ஓமர்சாய்! உலகக்கிண்ணத்தில் ரஷித் கான் படை முதல் வெற்றி

1 Min Read

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

சோஹைப் கான் விளாசல்

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த டி20 உலகக்கிண்ணப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதின.

Sohaib Khan

முதலில் ஆடிய அமீரக அணியில் சோஹைப் கான் 48 பந்துகளில் 68 ஓட்டங்களும் (4 சிக்ஸர், 6 பவுண்டரிகள்), அலிஷான் ஷரஃபு 31 பந்துகளில் 40 ஓட்டங்களும் விளாசினர்.

இதன்மூலம் ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ஓட்டங்கள் எடுத்தது. ஓமர்சாய் 4 விக்கெட்டுகளும், முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும், ரஷித் கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Muhammad Arfan

பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் குர்பாஸ் டக்அவுட் ஆக, நைப் 13 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து 16 ஓட்டங்கள் அடல் வெளியேற, அரைசதம் அடித்த இப்ராஹிம் ஜட்ரான் 41 பந்துக்களில் 53 ஓட்டங்கள் விளாசினார்.

ஓமர்சாய் மிரட்டல்

அதனைத் தொடர்ந்து அதிரடி காட்டிய தார்விஷ் ரசூலி 23 பந்துகளில் 33 ஓட்டங்களில் ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

Azmatullah Omarzai

அப்போது சிக்ஸர்களை பறக்கவிட்ட அஸ்மதுல்லா ஓமர்சாய் (Azmatullah Omarzai) 21 பந்துகளில் 40 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாச, ஆப்கானிஸ்தான் 19.2 ஓவர்களில் 162 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

டி20 உலகக்கிண்ணத்தில் ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியின் முதல் வெற்றி இதுவாகும். அமீரக அணியின் தரப்பில் சித்திக், அர்ஃபான் தலா 2 விக்கெட்டுகளும், ஜவாதுல்லா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Azmatullah Omarzai

Mohammad Nabi/Azmatullah Omarzai

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *