27 வயதில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய ரஷித் கான்! உலகில் எந்த ஜாம்பவானும் படைக்காத சாதனை

1 Min Read

ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் ரஷித் கான் 700வது டி20 விக்கெட்டை வீழ்த்தி பிரம்மாண்ட சாதனை படைத்தார்.

ரஷித் கான்

ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

Rashid Khan

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் ரஷித் கான் (Rashid Khan) அமீரக வீரர் முகமது அர்ஃபனின் விக்கெட்டை வீழ்த்தினார். இது டி20 கிரிக்கெட்டில் ரஷித் கானின் 700வது விக்கெட் ஆகும்.

இதன்மூலம் டி20யில் 700 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார்.

Muhammad Arfan

518 போட்டிகள்

518 டி20 போட்டிகளில் 20க்கு உட்பட்ட சராசரியுடன் ரஷித் கான் இந்த சாதனையை செய்துள்ளார்.

இதில் 18 முறை நான்கு விக்கெட்டுகளையும், 4 முறை ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

அவருக்கு அடுத்த இடத்தில் டுவைன் பிராவோ 631 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக்கிறார்.

Rashid Khan

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *