ஹாட்ரிக் சிக்ஸுடன் 23 பந்தில் 55 ரன்! அமெரிக்காவுக்காக இந்திய வம்சாவளி சஞ்சய்..முதல் அரைசதம்

1 Min Read

கிருஷ்ணமூர்த்தி மிரட்டல் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் அமெரிக்க வீரர் சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.

அதிரடி அரைசதம் அடித்த மோனங்க்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அமெரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கிண்ணப் போட்டி நடந்தது வருகிறது.

Sanjay Krishnamurthi

நாணய சுழற்சியில் வென்ற அமெரிக்க அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது.

ஜஹான்கிர் 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேற, அதிரடி அரைசதம் அடித்த மோனங்க் பட்டேல் 30 பந்துகளில் 52 ஓட்டங்கள் விளாசினார்.

சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி ருத்ரதாண்டம்

பின்னர் சாய்தேஜா 17 ஓட்டங்களில் அவுட் ஆக, சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி ருத்ரதாண்ட ஆட்டத்தை தொடங்கினார். அவரது அதிரடி ஆட்டத்தில் அதிவேகமாக அணியின் ஸ்கோர் உயர்ந்தது.

Sanjay Krishnamurthi

37 ஓட்டங்களில் இருந்த சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி (Sanjay Krishnamurthi) ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து முதல் அரைசதத்தை எட்டினார். அதுவும் 23 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 50 ஓட்டங்களை ஈட்டி சாதனையும் படைத்தார்.

மறுமுனையில் மிலிந்த் குமார் 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதிவரை களத்தில் நின்ற சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 33 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் விளாச, அமெரிக்க அணி 199 ஓட்டங்கள் குவித்தது. இது அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

USA vs Namibia, T20 world cup 2026

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *