உக்ரைனை அழுத்தும் அமெரிக்கா ரஷ்யாவை கண்டுகொள்வதில்லை: ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு

2 Min Read

அடுத்த வாரம் ஜெனீவாவில் அமெரிக்காவால் நடத்தப்படும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அர்த்தமுள்ளதாக இருக்கும்

ஆனால், போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனை அழுத்தும் அமெரிக்கா, இந்த விடயத்தில் ரஷ்யாவை கண்டுகொள்வதில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உக்ரைனை அழுத்தும் அமெரிக்கா ரஷ்யாவை கண்டுகொள்வதில்லை: ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு | Us Too Often Asks Ukraine Not Russia

மட்டுமின்றி, பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தும் நோக்கில் ரஷ்யா அதன் முன்னணி பேச்சுவார்த்தையாளரை அடிக்கடி மாற்றுவதால் முடிவுகள் தாமதமாவதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன், ரஷ்ய மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஜெனீவாவில் சந்திக்க உள்ளனர். 1945 க்குப் பிறகு ஐரோப்பாவின் மிகப்பெரிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுக்க முயன்று வருகிறார்.

இந்த நிலையில், வருடாந்திர மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய ஜெலென்ஸ்கி, அடுத்த வாரம் நடைபெறும் முத்தரப்பு சந்திப்புகள் நம் அனைவருக்கும் தீவிரமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும், உதவிகரமாகவும் இருக்கும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம்,

ஆனால் நேர்மையாகச் சொன்னால் சில நேரங்களில் இரு தரப்பினரும் முற்றிலும் மாறுபட்ட விடயங்களைப் பற்றிப் பேசுவது போல் உணர்கிறோம் என்றார்.

உக்ரைனும் ரஷ்யாவும், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் அபுதாபியில் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன, அவை ஆக்கபூர்வமானவை என்று இரு தரப்பினராலும் உறுதி செய்யப்பட்டுள்ளன, ஆனால் பெரிய முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.’

உக்ரைனை அழுத்தும் அமெரிக்கா ரஷ்யாவை கண்டுகொள்வதில்லை: ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு | Us Too Often Asks Ukraine Not Russia

நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை

இருப்பினும், கடுமையான தடைகள் மற்றும் அதிக ஆயுத விநியோகங்கள் மூலம் – ரஷ்யாவை அமைதியை நிலைநாட்ட அழுத்தம் கொடுக்க உக்ரைனின் நட்பு நாடுகளிடமிருந்து அதிக நடவடிக்கை எடுக்க ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்தார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பல்லாயிரக்கணக்கான ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் நுழைவதற்கு சில நாட்களுக்கு முன்பு அதே மாநாட்டில் பேசியபோது, ​​தான் விடுத்த வேண்டுகோளை நினைவு கூர்ந்த ஜெலென்ஸ்கி, மேற்கத்திய அதிகாரிகள் அதிகமாகப் பேசுவதாகவும், போதுமான நடவடிக்கைகள் அதில் எடுக்கப்படுவதில்லை என்றும் கூறினார்.

உக்ரைனை அழுத்தும் அமெரிக்கா ரஷ்யாவை கண்டுகொள்வதில்லை: ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு | Us Too Often Asks Ukraine Not Russia

மேலும், புடினை போர்நிறுத்தம் அறிவிக்க கட்டாயப்படுத்தும் அதிகாரம் ட்ரம்பிற்கு உள்ளது, அவர் அவ்வாறு செய்ய வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

இந்த நிலையில், தேசிய தேர்தல்களுடன் இணைந்து நடத்தப்படும் எந்தவொரு சமாதான ஒப்பந்தத்திலும் வாக்கெடுப்பு நடத்த போர்நிறுத்தம் அவசியம் என்று உக்ரேனிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் உக்ரைன் ஏற்கனவே பல சமரசங்களைச் செய்து கொண்டதால், ரஷ்யா என்ன சமரசங்களுக்குத் தயாராக இருக்கும் என்பதைக் கேட்க விரும்புவதாக ஜெலென்ஸ்கி கூறினார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *