வலது கண்ணின் பார்வையை இழந்த பாகிஸ்தானின் இம்ரான் கான்? வேதனை தெரிவிக்கும் பிரபலங்கள்

1 Min Read

சிறையில் உள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.

இம்ரான் கான்

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) பல மாதங்களாக மெய்நிகர் சிறையில் உள்ளார்.

Imran Khan

73 வயதாகும் அவருக்கும் கண் தொற்று ஏற்பட்டதால், வலது கண்ணில் கடுமையான பார்வை இழப்பு ஏற்பட்டதாக அவரது சட்டக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், அரசாங்கத்தின் புறக்கணிப்பால் அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் கூறியுள்ளது. ஆனால், அரசாங்க செய்தித் தொடர்பாளர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஆகியோர் சிறையில் இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ அணுகலை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Imran Khan

உடல்நிலையைக் கருத்தில் கொண்டு

இந்த நிலையில், அரசாங்க அமைச்சரான தாரிக் ஃபசல் சௌத்ரி தனது எக்ஸ் பதிவில்,

“அவரது (இம்ரான் கான்) உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரை மருத்துவமனைக்கு மாற்றவும், மருத்துவ வாரியத்தை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

வாசிம் அக்ரம் (Wasim Akram) தனது எக்ஸ் பக்கத்தில், “எங்கள் கேப்டன் இம்ரான் கான் உடல்நலப் பிரச்சனைகளை சந்திப்பதைக் கேட்பது மனவேதனை அளிக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

அதேபோல் வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், ஷாஹித் அப்ரிடி ஆகியோரும் இம்ரான் கானுக்காக வருத்தப்பட்டும், ஆதரவாகவும் பேசியுள்ளனர்.

Waqar Younis/Wasim Akram

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *