கனேடிய ஜோடிக்கு இந்திய ரயிலில் கிடைத்த வித்தியாசமான அனுபவம்

1 Min Read

இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற இரண்டு கனேடியர்களுக்கு வித்தியாசமான அனுபவம் ஒன்று கிடைத்தது.

இந்திய ரயிலில் பயணித்த கனேடியர்கள் இருவர்

கிம் கிரீன்வுட் என்னும் கனேடிய பெண்ணும் அவருடன் மற்றொரு கனேடியரும் இந்தியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.

கனேடிய ஜோடிக்கு இந்திய ரயிலில் கிடைத்த வித்தியாசமான அனுபவம் | Canadians Couples Shares India Train Experience

அவர்கள், ரயில் ஒன்றில் தூங்கும் வசதி கொண்ட இருக்கைகளை முன்பதிவு செய்த நிலையில், ஒரு ரயில் நிலையத்தில் ரயில் நிற்க, திபுதிபுவென சில சிறுவர்கள் ரயிலில் ஏறியுள்ளார்கள்.

அந்த சம்பவம் குறித்து சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ள கிம், அதற்குப் பிறகுதான், இந்தியாவில் ரயிலில் தூங்கும் வசதி கொண்ட இருக்கை முன்பதிவு செய்தாலும், அது இரவில் தூங்குவதற்கு மட்டுமே, பகலில் மற்றவர்களுடன் இருக்கையை பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பது தனக்குப் புரிந்தது என்கிறார்.

என்றாலும், பிள்ளைகளைக் கண்டதும் எரிச்சலடையாமல், அவர்களுடன் விளையாடிக்கொண்டு ஜாலியாக பயணித்துள்ளார்கள் இருவரும்.

அத்துடன், சிலர் தங்கள் வீட்டில் தயாரித்த உணவைக் கொடுத்ததாகவும் தெரிவிக்கிறார் கிம்.

ஒரு நிமிடம்கூட தங்களால் தூங்கமுடியவில்லை என்பது உண்மைதான் என்றாலும், பிள்ளைகளுடன் ஜாலியாக விளையாடிக்கொண்டு பயணித்தது ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைந்தது என்கிறார் அவர்.

அவரது செய்தியைப் படித்த பலரும், பொதுவாக இதுபோல் பிள்ளைகள் வந்து விளையாடிக்கொண்டிருந்தால் அதை தொல்லையாக எடுத்துக்கொள்பவர்கள் உண்டு. ஆனால், நீங்கள் அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டதற்கு பாராட்டுக்கள் என்னும் ரீதியில் கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *