தலைநகரம் பாதுகாப்பாக இல்லை! லண்டனுக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டிய நேரமிது – நாதிம் ஜஹாவி

1 Min Read

தலைநகரம் பாதுகாப்பாக உணரவில்லை என்பதால், லண்டன் தெருக்களுக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டிய நேரம் இது என Reform நாடாளுமன்ற உறுப்பினர் நாதிம் ஜஹாவி தெரிவித்துள்ளார்.

100,000 பேருக்கு ஒரு சட்டவிரோத கொலை

இங்கிலாந்து தலைநகரம் லண்டனில், கடந்த ஆண்டு 100,000 பேருக்கு ஒரு சட்டவிரோத கொலை நடந்ததாக புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

Reform MP Nadhim Zahawi

முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) லண்டனில் பாதுகாப்பு குறித்து கடந்த மாதம் பலமுறை விமர்சித்தார்.

இந்த நிலையில் Reform நாடாளுமன்ற உறுப்பினர் நாதிம் ஜஹாவி நேர்காணல் ஒன்றில் லண்டனின் பாதுகாப்பு குறித்து பேசியுள்ளார். அவரிடம், ‘நீங்கள் லண்டனில் பாதுகாப்பாக உணர்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது.

13 வயது பிள்ளை லண்டனில் பாதுகாப்பாக

அதற்கு பதிலளித்த நாதிம் ஜஹாவி (Nadhim Zahawi), ‘இல்லை, நான் ஒரு பெரிய ஆள். ஆனால் எனது 13 வயது பிள்ளை லண்டனில் பாதுகாப்பாக நடக்க முடியும் என்பதில் என நான் நினைக்கவில்லை – அது சரியானதாக இருக்க முடியாது.

நான் உள்துறை செயலாளராக இருந்திருந்தால், காவல்துறைத் தலைவரை அழைத்து “கேளுங்கள், உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் நாங்கள் இராணுவத்தை அனுப்புவோம்” என்று கூறுவேன்’ என்றார்.

மேலும் அவர், தலைநகரில் பாதுகாப்பை உணரவில்லை என்பதால், லண்டன் தெருக்களுக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டிய நேரம் இது என்று குறிப்பிட்டார்.

Reform MP Nadhim Zahawi

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *