அடுத்த ஐந்து ஆண்டுகளில், எங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் சொந்த வீடும் காரும் இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம், அதனால்தான் அவர்களுக்கு வீடு மற்றும் கார் வழங்க முடிவுசெய்தோம் என்கிறார் அவர். 12 ரூபாயுடன் நகரத்துக்கு ரயில் ஏறிய நபர்: இன்று 15,000 கோடிக்கு அதிபதி | Rs12 To 15 000 Crore Empire Diamond King Of India Dholakia, 50 ஏக்கர் பரப்பிலான வீடு ஒன்றில் தன் குடும்பத்தினர் 64 பேருடன் வாழ்கிறார். மூன்று தலைமுறையினர் அந்த வீட்டில் ஒன்றாக வாழ்கிறார்கள். வாங்குவதை விட கொடுப்பதில்தான் மகிழ்ச்சி என்று கூறும் Dholakia, தன் லாபத்தில் கொஞ்சம் குறையும் வகையில் அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது, மேஜிக் நடக்கும் என தான் நம்புவதாக கூறுகிறார்.

1 Min Read

இந்தியாவின் கேரள மாநிலத்தில், சாலையில் போக்குவரத்து நெரிசல் இருந்ததால் அதைத் தவிர்ப்பதற்காக, பாதசாரிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள நடைபாதையில் ஸ்கூட்டருடன் நுழைந்தார் ஒருவர்.

வைரலான வயதான பெண்மணியின் செயல்

அப்போது அவ்வழியே வந்த வயதான பெண்மணி ஒருவர், அந்த ஸ்கூட்டரில் வந்த நபரை தடுத்து நிறுத்தியுள்ளார்.

நடைபாதையில் மோட்டார் சைக்கிளுடன் நுழைந்த நபர்: வைரலான வயதான பெண்மணியின் செயல் | Elderly Kerala Woman Stops Scooter On Footpath

அப்படியும், அந்தப் பெண்ணைத் தாண்டி ஓரமாக சென்றுவிட அந்த நபர் முயன்றுள்ளார்.

ஆனால், அவரை விடாத அந்தப் பெண்மணி, குறுக்கே நின்றதுடன், அவரை பின்னோக்கிச் சென்று சாலையில் வாகனத்தை செலுத்துமாறு உறுதியாகக் கூற, அவரது உறுதியைக் கண்ட அந்த நபர் பின்னோக்கிச் சென்று சாலையில் போக்குவரத்து சிக்னலில் நிற்பதை வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணலாம்.

கேரள மோட்டார் வாகனத்துறை பகிர்ந்துள்ள அந்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில், அந்த வீடியோவிலிருக்கும் பெண்மணியை அடையாளம் காண உதவுமாறு துறைசார் அதிகாரிகள் சமூக ஊடகவாசிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.

கேரளா மோட்டார் வாகனங்கள் சட்டப்படி நடைபாதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *