நமீபியாவிற்கு எதிராக பாரிய வெற்றி – பல சாதனைகளை படைத்த இந்தியா

2 Min Read

2026 T20 உலக கிண்ணத்தின், இந்தியா மற்றும் நமீபியா அணிகள் மோதிய லீக் போட்டி டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்றது.

இந்தியா பாரிய வெற்றி

நாணய சுழற்சியில் வென்ற நமீபியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்தியா அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் குவித்தது.

நமீபியாவிற்கு எதிராக பாரிய வெற்றி - பல சாதனைகளை படைத்த இந்தியா | T20 Wc India Beat Namibia With Historic Records

அதிரடியாக ஆடிய இஷான் கிஷான் 24 பந்துகளில் 6 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் உட்பட 61 ஓட்டங்கள் குவித்தார்.

நமீபியாவிற்கு எதிராக பாரிய வெற்றி - பல சாதனைகளை படைத்த இந்தியா | T20 Wc India Beat Namibia With Historic Records

ஹர்திக் பாண்டியா 28 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் உட்பட 52 ஓட்டங்கள் குவித்தார்.

நமீபியாவிற்கு எதிராக பாரிய வெற்றி - பல சாதனைகளை படைத்த இந்தியா | T20 Wc India Beat Namibia With Historic Records

நமீபியா தரப்பில் அணித்தலைவர் கெர்ஹார்ட் எராஸ்மஸ் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

210 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி, 18.2 ஓவர்களில் 116 ஓட்டங்கள் மட்டுமே ஆல் அவுட் ஆனது.

நமீபியாவிற்கு எதிராக பாரிய வெற்றி - பல சாதனைகளை படைத்த இந்தியா | T20 Wc India Beat Namibia With Historic Records

52 ஓட்டங்கள் மற்றும் 2 விக்கெட்கள் எடுத்த ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியா படைத்த சாதனைகள்

93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இந்த போட்டியின் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளது.

நமீபியாவிற்கு எதிராக பாரிய வெற்றி - பல சாதனைகளை படைத்த இந்தியா | T20 Wc India Beat Namibia With Historic Records

T20 உலக கிண்ணத்தில் இந்தியா அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற பெரிய வெற்றி இதுவாகும்.

முன்னதாக 2012 T20 உலக கிண்ணத்தில் இங்கிலாந்திற்கு எதிராக 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே அதிகபட்சமாக இருந்தது.

T20 உலக கிண்ணத்தில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

நமீபியாவிற்கு எதிராக பாரிய வெற்றி - பல சாதனைகளை படைத்த இந்தியா | T20 Wc India Beat Namibia With Historic Records

தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பெற்றதே அதிகபட்சமாக இருந்தது.

இஷான் கிஷான் மற்றும் சஞ்சு சாம்சனின் அதிரடியால், 6.2 ஓவர்களில் இந்தியா 100 ஓட்டங்களை எட்டியது. இதன் மூலம், T20 உலக கிண்ணத்தில் அதிவேகமாக 100 ஓட்டங்களை எட்டிய அணி என்ற நெதர்லாந்தின் 12 வருட சாதனையை இந்தியா முறியடித்தது.

நமீபியாவிற்கு எதிராக பாரிய வெற்றி - பல சாதனைகளை படைத்த இந்தியா | T20 Wc India Beat Namibia With Historic Records

முன்னதாக, 2014 T20 உலக கிண்ணத்தில் அயர்லாந்துக்கு எதிராக நெதர்லாந்து அணி 7ஓவர்களில் 100 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

மேலும், T20 உலக கிண்ணத்தில் அரைசதம் விளாசிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை இஷான் கிஷான் படைத்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *