டி20 உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை அணி 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தியது.
225 ஓட்டங்கள்
பல்லேகேலேவில் நடந்த டி20 உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை மற்றும் ஓமன் அணிகள் மோதின.
முதலில் ஆடிய இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ஓட்டங்கள் குவித்தது.
குசால் மெண்டிஸ் 61 ஓட்டங்களும், பவன் ரத்னாயகே 60 ஓட்டங்களும், தசுன் ஷானகா 50 ஓட்டங்களும் விளாசினர்.

105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
பின்னர் களமிறங்கிய ஓமன் அணி தொடர்ச்சியை விக்கெட்டுகளை பறிகொடுத்து. மொஹம்மது நதீம் மட்டும் நின்று ஆட, ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

ஓமன் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், இலங்கை அணி 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசிவரை களத்தில் நின்ற மொஹம்மது நதீம் (Mohammad Nadeem) 53 ஓட்டங்கள் எடுத்தார். துஷ்மந்தா சமீரா, மஹீஷ் தீக்ஷணா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.






