கிரிக்கெட்டில் ஆட்டநாயகனுக்கு முழு கோழி பரிசு: எங்கு தெரியுமா? தீயாய் பரவும் வீடியோ

1 Min Read

உத்தர பிரதேசத்தில் கிரிக்கெட் போட்டியில் ஆட்டநாயகனுக்கு நாட்டுக்கோழி பரிசாக வழங்கப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

மஹுவாரி பிரீமியர் லீக்

உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் மஹுவாரி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடந்தது.

கிட்டத்தட்ட ஒரு வாரம் நடைபெற்ற இந்தப் போட்டியில் 16 அணிகள் போட்டியிட்டன. போட்டி ஒன்றில் ஆட்டநாயகன் (Man of the Match) பட்டம் வென்றவருக்கு வெகுமதியாக வழங்கப்பட்ட பரிசுதான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

ஆட்டநாயகன் விருதுக்கு என்று பணம், கோப்பை அல்லது இருசக்கர வாகனம் என எதாவது ஒரு பொருள் வழக்கமாக வழங்கப்படும்.

ஆனால், மஹுவாரி தொடரில் ஆட்டநாயகன் விருது வென்றவருக்கு உயிருள்ள நாட்டு கோழி அல்லது சேவல் வழங்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பட்டம் வென்றவர் அதனை கையில் வைத்துக் கொண்டு இருக்கும் வீடியோ தற்போது ஒன்லைனில் வேகமாக பரவி வருகிறது.

Mahuaari Premier League video viral

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *