இந்தியாவின் முதல் இசைச்சாலை! ஏஆர் ரஹ்மானின் பாடல்

1 Min Read

இந்தியாவின் முதல் இசைச்சாலையை அறிமுகம் செய்துள்ளது மும்பை மாநகராட்சி, Chhatrapati Sambhaji Maharaj Coastal Road பகுதியில் வாகனங்கள் செல்லும் போது இசை ஒலிக்கிறது.

Nariman Point முதல் Worli வரை பயணிக்கும் போது இசையை கேட்டு மகிழலாம். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மேற்பரப்பில் கார்கள் 70- 80 கி.மீ வேகத்தில் செல்லும் போது ஏஆர் ரஹ்மான் இசையமைத்த ”ஜெய் ஹோ” பாடல் இசைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் இசைச்சாலை! ஏஆர் ரஹ்மானின் பாடல் | Jai Ho Indias First Musical Road

சாலைகளில் போடப்பட்டுள்ள Rumble Strips அல்லது Grooves-களில் கார்கள் செல்லும் போது டயர்களுக்கும் சாலைக்கும் இடையிலான உராய்வு ஒலி அலைகளை எழுப்பி இசையை உருவாக்குகிறது.

சரியான இடைவெளியில் Grooves இருப்பதால், பாடல்களை மிக தெளிவாக ஒலிக்கின்றன, 70 முதல் 80 கி.மீ வேகத்தில் பயணித்தால் மட்டும் இசையை தெளிவாக கேட்கலாம், கூடுதலாகவோ, குறைவான வேகத்திலோ பயணிக்ககூடாது.

இந்தியாவின் முதல் இசைச்சாலை! ஏஆர் ரஹ்மானின் பாடல் | Jai Ho Indias First Musical Road

மகாராஷ்டிராவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு இணங்க, கடற்கரை சாலையில் மக்களுக்கான புது அனுபவமாக இசைச்சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *