ஒரு நாட்டை ஆளும் 7 மன்னர்கள்; அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடு – எது தெரியுமா?

1 Min Read

உலகின் முக்கியமான நாட்டை 7 மன்னர்கள் ஆட்சி செய்வது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஐக்கிய அரபு அமீரகம்

அரேபிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடுகளில் ஒன்று ஐக்கிய அரபு அமீரகம்.

ஒரு நாட்டை ஆளும் 7 மன்னர்கள்; அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடு - எது தெரியுமா? | 7 Kings 7 Cities In Country Uae Most Indians Live

83,600 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நாட்டில், சுமார் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நாடானது, அபுதாபி, அஜ்மான், துபாய், புஜைரா, ரஃஸ் அல்-கைமா, சார்ஜா, உம் அல்-குவைன் ஆகிய 7 அமீரகங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது.

ஒரு நாட்டை ஆளும் 7 மன்னர்கள்; அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடு - எது தெரியுமா? | 7 Kings 7 Cities In Country Uae Most Indians Live

ஒவ்வொரு அமீரகமும் ஷேக் என அழைக்கப்படும் அதன் ஆட்சியாளர்களால் ஆட்சி செய்யப்படுகிறது. தலைமுறை தலைமுறையாக இங்கு மன்னராட்சி நடைபெற்று வருகிறது.

ஒரு நாட்டை ஆளும் 7 மன்னர்கள்; அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடு - எது தெரியுமா? | 7 Kings 7 Cities In Country Uae Most Indians Live

இதில் அபுதாபியின் ஆட்சியாளரே, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆட்சியாளராக தேர்வு செய்யப்படுகிறார்.

ஒரு நாட்டை ஆளும் 7 மன்னர்கள்; அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடு - எது தெரியுமா? | 7 Kings 7 Cities In Country Uae Most Indians Live

காரணம் நாட்டின் பெரிய அமீரகமாக அபுதாபியே உள்ளது. மொத்தமுள்ள 83,600 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், அபுதாபி 67,340 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமாகவும் அபுதாபியே செயல்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய முடிவுகள் அபுதாபியிலே எடுக்கப்படுகிறது.

அரசியல் அதிகாரத்தையும் பாரிய எண்ணெய் வளத்தையும் அபுதாபி வைத்துள்ளது.

அபுதாபிக்கு அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரபலமான அமீரகமாக துபாய் அமைந்துள்ளது. துபாய் சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை மையமாக வைத்துள்ளது.

ஒரு நாட்டை ஆளும் 7 மன்னர்கள்; அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடு - எது தெரியுமா? | 7 Kings 7 Cities In Country Uae Most Indians Live

உலகின் உயரமமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா, செயற்கையாக உருவாக்கப்பட்ட பாம் ஜுமேரா தீவு, வத்திக்கான் நாட்டை விட பெரிய துபாய் மால் ஆகியவை துபாய்க்கு பெருமளவிலான மக்களை ஈர்க்கிறது.

ஒரு நாட்டை ஆளும் 7 மன்னர்கள்; அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடு - எது தெரியுமா? | 7 Kings 7 Cities In Country Uae Most Indians Live

ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த மக்கள் தொகையில், 38.2% இந்தியர்கள் ஆகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *