இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழ் இளைஞர் கைது
பிரித்தானியாவில் இளம் பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இலங்கை சேர்ந்த தமிழ் இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவுதாம்படன் பகுதியில் 19 வயது இளம்பெண்ணுக்கு போதைப்பொருள் வழங்கி அந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 5ஆம் திகதி சவுதாம்டன் நகரின் போலிகோன் பகுதியில் வைத்து பாலியல் சீண்டல் செய்யப்பட்டதாக பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட 21 வயதான வியான் சுரேந்திரநாதன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் சீண்டல், பாலியல் ரீதியாகத் சீண்டல் செய்யும் நோக்கத்தில், அந்தப் பெண்ணின் உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்ய மயக்க மருந்து அல்லது போதைப்பொருள் வழங்கியமை, ‘Class A’ வகையைச் சேர்ந்த அபாயகரமான போதைப்பொருளைத் தன்னிடம் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சந்தேக நபர் மீது சுமத்தப்பட்டுள்ளன.




