கனடாவில் பாடசாலையில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு சம்பவம்
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 10 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியானது.

அதன் பின்னர் சந்தேக நபர் அதே இடத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதை பொலிஸார் உறுதி செய்தனர்.
மேலும், தாக்குதல்தாரி ஒரு பெண் என தகவல் வெளியான நிலையில் இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சியடைந்தேன்
இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், “கனடாவில் நடந்த கொடூரமான துப்பாக்கிச்சூட்டால் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த ஆழ்ந்த துக்க தருணத்தில் கனடா மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது” என தெரிவித்துள்ளார்.





