மகள்களையும் தங்கைகளையும் எப்ஸ்டீனுக்கு அறிமுகம் செய்துவைத்த பெண்கள்: அருவருப்பின் உச்சகட்டம்

1 Min Read

வேலை தருவதாக வாக்களித்து, பருவம் எய்தாத சிறுமிகள் முதல், இளம்பெண்கள் வரை, ஏராளமானோரை சீரழித்து, அந்தப் பெண்களை அரசியல் பிரபலங்கள் உட்பட தனது நண்பர்கள் பலருக்கும் விருந்தாக்கியவர் அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன்.

மகள்களையும் தங்கைகளையும் எப்ஸ்டீனுக்கு அறிமுகம் செய்துவைத்த பெண்கள்: அருவருப்பின் உச்சகட்டம் | Uae Diplomat Al Owais Introduce Sister To Epstein

இந்நிலையில், அமெரிக்க நீதித்துறை, எப்ஸ்டீன் தொடர்பிலான, எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் ஆவணங்களை வெளியிட்டுவருகிறது.

அந்த ஆவணங்கள், பிரபலங்கள் பலருடைய முகத்திரைகளைக் கிழித்து அவர்களுடைய அருவருப்பான முகங்களை வெளி உலகுக்குக் காட்டிவருகின்றன.

மகள்களையும் தங்கைகளையும்…

எப்ஸ்டீன் இளம்பெண்களை சீரழித்த மோசமான குற்றவாளி என்று தெரிந்தும், தன் மகள்களான இளவரசிகளின் அந்தரங்க வாழ்வு குறித்து அவர்களுடைய தாயும், இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியுமாகிய சாரா ஃபெர்குசன் எப்ஸ்டீனுடன் பகிர்ந்துகொண்டது குறித்த செய்திகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன.

மகள்களையும் தங்கைகளையும் எப்ஸ்டீனுக்கு அறிமுகம் செய்துவைத்த பெண்கள்: அருவருப்பின் உச்சகட்டம் | Uae Diplomat Al Owais Introduce Sister To Epstein

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரக தூதரும், மனித உரிமைகளுக்கான அமீரக நிரந்தர ஆணையத்தின் இயக்குநருமான ஹிந்த் அல் ஓவாயிஸ் (Hind Al-Owais) என்னும் பெண்ணின் பெயர் எப்ஸ்டீன் ஆவணங்களில் 469 முறை இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

மகள்களையும் தங்கைகளையும் எப்ஸ்டீனுக்கு அறிமுகம் செய்துவைத்த பெண்கள்: அருவருப்பின் உச்சகட்டம் | Uae Diplomat Al Owais Introduce Sister To Epstein

ஓவாயிஸ் எப்ஸ்டீனுக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில், நான் உங்களுக்கு என் தங்கையை அறிமுகம் செய்து வைக்க ஆவலாக இருக்கிறேன், அவள் என்னை விட அழகு என குறிப்பிட்டுள்ளார்.

மகள்களையும் தங்கைகளையும் எப்ஸ்டீனுக்கு அறிமுகம் செய்துவைத்த பெண்கள்: அருவருப்பின் உச்சகட்டம் | Uae Diplomat Al Owais Introduce Sister To Epstein

மற்றொரு மின்னஞ்சலில், நானும் என் தங்கையும் வந்துவிட்டோம், நீங்கள் அவளை சந்திக்கவேண்டும், எப்போது எங்களை சந்திப்பீர்கள் என்று சொல்லுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் ஓவாயிஸ்.

இந்த ஓவாயிஸ், பெரிய மாநாடுகளில் மனித உரிமைகள் குறித்து, குறிப்பாக பெண்களின் உரிமைகள் குறித்து அடிக்கடி பேசுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *