ஜனாதிபதி தேர்தலுக்கான தயாரிப்புகளையும் அறிவிக்க, உக்ரேனிய வோலோடிமிர் ஜெலென்ஸ்கி திட்டமிட்டுள்ளார்.
வான்வழி தாக்குதல்
ரஷ்யாவின் நான்கு ஆண்டுகால படையெடுப்பை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், உக்ரேனிய மற்றும் ரஷ்ய அதிகாரிகள் அபுதாபியில் அமெரிக்க மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

ஆனாலும், நேற்று ரஷ்யா நடத்திய வான்வழி குண்டுவெடிப்பு தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர்.
ஜெலென்ஸ்கியின் திட்டம்
இந்த நிலையில், ரஷ்யாவுடனான ஒரு சமாதான ஒப்பந்தம் குறித்த வாக்கெடுப்புடன், ஜனாதிபதித் தேர்தலுக்கான தயாரிப்புகளையும் அறிவிக்க வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) திட்டமிட்டுள்ளார்.
பைனான்சியல் டைம்ஸ் ஊடகம், திட்டமிடலில் ஈடுபட்டுள்ள உக்ரேனிய மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, தயாரிப்புகள் குறித்த விவரங்கள் 24ஆம் திகதி அன்று பகிரங்கப்படுத்தப்படும் என்று கூறியுள்ளது.





