இனி பொதுத்தேர்வு விடைத்தாள்கள் ஆன்லைனில் திருத்தப்படும் – வெளியான அறிவிப்பு

1 Min Read

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் ஆன்லைன் மூலம் திருத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரும் 17ஆம் திகதி தொடங்கி ஏப்ரல் 9ஆம் திகதி வரை நடைபெறும்.

அதேபோல், 10ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு 17ஆம் திகதி தொடங்கி மார்ச் 9ஆம் திகதி முடிவடையும் என்று அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்.

இனி பொதுத்தேர்வு விடைத்தாள்கள் ஆன்லைனில் திருத்தப்படும் - வெளியான அறிவிப்பு | Cbse Plus 2 Answer Sheets To Be Evaluated Online

ஆசிரியர்கள் கணினி மூலம் அவற்றை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் வழங்குவார்கள்.

இதனால் திருத்தப் பிழைகள் குறையும், ஆசிரியர்களுக்கு சிரமம் இருக்காது என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், பள்ளிகளில் போதிய கணினி வசதிகள் இருப்பதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், 10ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் வழக்கம்போல் கைப்படவே திருத்தப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *