இந்தியாவின் கடைசி கிராமம் எது தெரியுமா?

1 Min Read

1971 போருக்கு முன்பு வரை பாகிஸ்தானின் பகுதியாக இருந்த கிராமம் தற்போது இந்தியாவின் கடைசி கிராமமாக உள்ளது.

துர்டுக் கிராமம்

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையில் ஏராளமான கதைகள் உள்ளது. அதில் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த கிராமமே,  தற்போது இந்தியாவின் பகுதியாக உள்ளது.

இந்தியாவின் கடைசி கிராமம் எது தெரியுமா? | Turtuk Last Village Of India Were Park Of Pak 1971

லடாக்கின் லே மாவட்டத்தில் உள்ள நுப்ரா தெஹ்ஸில் உள்ள துர்டுக் கிராமம் இந்தியாவின் கடைசி கிராமம் என அழைக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த இந்த துர்டுக் கிராமம், 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய – பாகிஸ்தான் போருக்குப் பின்னர் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியது. தற்போது இந்தியாவின் அதிகாரப்பூர்வ பகுதியாக உள்ளது.

துர்டுக் கிராமம், இந்தியா – பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LOC) இருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இந்த கிராமம் புவியியல் ரீதியாக பாகிஸ்தானின் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக உள்ள பால்டிஸ்தான் பகுதியில் அமைந்திருந்தாலும், துர்டுக் கிராமம் உள்ளிட்ட 5 பகுதிகள் இந்தியாவின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது.

2010 ஆம் ஆண்டு இந்த கிராமம் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.

இந்தியாவின் கடைசி கிராமம் எது தெரியுமா? | Turtuk Last Village Of India Were Park Of Pak 1971

சுற்றுலாப் பயணிகள் இங்கு வர லே மாவட்ட நிர்வாகத்திடமிருந்து இன்னர் லைன் பெர்மிட்டைப் பெற வேண்டும்.

சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ஏராளமான மலிவு விலை தங்கும் விடுதிகள் உள்ளது.

இந்தியாவின் கடைசி கிராமம் எது தெரியுமா? | Turtuk Last Village Of India Were Park Of Pak 1971

துர்டுக் நீர்வீழ்ச்சி, ஏரிகள், பால்டி அருங்காட்சியகம்ம் டிஸ்கிட் புத்த மடாலயம் என சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க ஏராளமான இடங்கள் இங்கு அமைந்துள்ளன.

மேலும், இங்கு உள்ள கிராம மக்கள் ஹிந்தி, பால்டி மற்றும் லடாக்கி மொழிகள் பேசுகின்றனர். இவர்களின் உறவினர்கள் பலரும் பாகிஸ்தானில் வசித்து வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *