துபாயில் தங்கம் வாங்கி இந்தியாவில் விற்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

1 Min Read

துபாயில் தங்கம் இந்தியாவை விட மலிவாக கிடைக்கிறது. அதற்கு காரணம் அங்கு வரிகள் குறைவாக இருப்பதுதான்.

இந்தியாவுக்கு தங்கம் கொண்டு வரும்போது சுங்க வரி செலுத்த வேண்டும்.

இந்தியாவில் அதை விற்கும்போது 3 சதவீத ஜிஎஸ்டியும் கட்ட வேண்டி வரும். மேலும், நாணய மாற்ற செலவும் சேரும்.

நகைக்கடைக்காரர்கள் தங்கத்தை வாங்கும்போது தள்ளுபடி விலையே தருவார்கள்.

துபாயில் தங்கம் வாங்கி இந்தியாவில் விற்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? | How Much Profit Buying Gold In Dubai

அரசு விதிமுறைகளின்படி, பெண்கள் 40 கிராம் வரை மற்றும் ஆண்கள் 20 கிராம் வரை தங்க நகைகளை வரியின்றி கொண்டு வரலாம்.

இதை மீறினால் கட்டாயம் வரி செலுத்த வேண்டும். தங்கக் கட்டி அல்லது நாணயம் கொண்டு வந்தால் கூடுதல் வரி விதிக்கப்படும்.

உதாரணமாக, துபாயில் ஒரு கிராம் தங்கம் ரூ.13,500 என்றால், ரூ.20 லட்சத்திற்கு சுமார் 148 கிராம் தங்கம் வாங்க முடியும்.

எல்லா வரி மற்றும் செலவுகள் சேர்த்து பார்த்தால் மொத்த செலவு சுமார் ரூ.20.8 லட்சம் ஆகிறது.

துபாயில் தங்கம் வாங்கி இந்தியாவில் விற்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? | How Much Profit Buying Gold In Dubai

இந்தியாவில் ஒரு கிராம் தங்கம் ரூ.15,200 என்ற விலையில் விற்கப்பட்டாலும், இறுதியில் கையில் கிடைப்பது சுமார் ரூ.22 லட்சம் தான்.

இதனால் லாபம் சராசரியாக ரூ.1 லட்சம் அளவிலேயே இருக்கும்.

எனவே துபாயில் இருந்து தங்கம் வாங்கி இந்தியாவில் விற்பது பெரிய லாபம் தரும் வழி அல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இது நிரந்தர வருமானம் தரும் வணிகமாக இல்லாமல், தனிப்பட்ட தேவைக்காக குறைந்த அளவில் தங்கம் வாங்குவது நல்ல தேர்வாக இருக்கலாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *