தபால் அலுவலக RD திட்டம் – மாதம் ரூ.5000 முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்?

1 Min Read

விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு எதிர்கால சேமிப்புக்கு மக்கள் முதலீட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தங்கம்,வெள்ளி ஆகியவற்றின் விலை அதிகரித்து வந்தாலும், அவ்வப்போது விலை குறைவு ஏற்படுவதால் மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

தபால் அலுவலக RD திட்டம்

அதேவேளையில், தபால் அலுவலகங்கள் வழங்கும் முதலீட்டு திட்டங்களுக்கு அரசு உத்தரவாதம் அளிப்பதால் மக்கள் அதில் நம்பிக்கையாக முதலீடு செய்து வருகின்றனர்.

post office schemes in low investment high returns

குறிப்பாக தபால் அலுவலகம் வழங்கும் RD திட்டத்தில், நிலையான வட்டி விகிதம் வழங்குவதோடு, 3 மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் பணம் கூட்டு சேர்க்கப்பட்டு, வட்டிக்கு வட்டி வழங்கப்படும்.

இதில் குறைந்த பட்சமாக மாதம் ரூ.100 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

குறைந்த ஊதியம் பெறுபவர்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள் கூட மாதந்தோறும் கிடைக்கும் வருமானத்தில் சிறு தொகையை இதில் முதலீடு செய்யலாம். இதில், 6.7% வட்டி வழங்கப்படுகிறது.

உதாரணத்திற்கு ஒருவர் 5 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5000 முதலீடு செய்து வந்தால், 5 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் முதலீடு செய்த ரூ. 3 லட்சத்துடன் வட்டியாக ரூ.56,830 உட்பட ரூ.3,56,830 கிடைக்கும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *