வருமான வரி சிக்கலில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்று, முன்னாள் வருமான வரி அதிகாரி பாஸ்கரன் கிருஸ்ணமூர்த்தி பேசியுள்ளார்.
இவை (வரி சிக்கல்) எதுவுமே ஒரு அழுத்தத்தை தரக்கூடிய விடயம் அல்ல. ஒரு திரைப்படத்திற்கு தடைகள் வருவது என்பது காலகாலமாக இருக்கும் விடயம்தான்.
2015 செப்டம்பர் 30யில்தான் விஜய்யின் வீட்டில் சோதனை நடக்கிறது. அப்போதுதான் 5 கோடி ரூபாய் ரொக்கமாக கிடைத்தது.
ஆனால் அவை கணக்கில் காட்டப்படவில்லை. விஜய் அவர்களும் அதனை ஒப்புக்கொண்டதாகத்தான் தகவல்.
அப்போது கணக்கில் காட்டப்படாத வருமானமானது, வருமான வரித்துறையினரின் சோதனையில் வெளியே வருகிறது என்று கூறும்போது, அதை அறிவிக்கப்படாத வருமானம் என்று கூறுகின்றனர்.
அவ்வாறு கண்டுபிடிக்கப்படும்போது அதன் மேல் அபராதம் விதிக்கப்படும். இது எல்லோருக்கும் பொதுவானதாகும்.




