BCCI ஒப்பந்த பட்டியலில், A+பிரிவில் இருந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை A பிரிவுக்கு மாற்றாமல் ஏன் B பிரிவுக்கு மாற்றினார்கள் என பார்க்கலாம்.
BCCI ஒப்பந்த பட்டியல்
இந்திய கிரிக்கெட் வாரியம்(BCCI) ஒவ்வொரு ஆண்டும் வீரர்களின் செயல்பாடு மற்றும் அவர்கள் விளையாடும் போட்டிகளின் அடிப்படையில் மத்திய ஒப்பந்தங்களை அறிவிக்கும். இந்த ஒப்பந்த அடிப்படையிலே வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

மேலும் வழக்கமாக உயர்ந்த பிரிவாக கருதப்படும் A+ பிரிவை பிசிசிஐ ரத்து செய்துள்ளது. தற்போது A, B, C ஆகிய 3 பிரிவுகளை மட்டுமே வைத்துள்ளது.
இந்த ஆண்டு வெளியான ஒப்பந்தத்தில் மொத்தமாக 30 ஆண்களும், 21 பெண் கிரிக்கெட் வீராங்கனைகளும் இடம் பிடித்துள்ளனர்.
இதில், A பிரிவில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடியும், B பிரிவில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடியும், C பிரிவில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியும் ஊதியம் வழங்கப்படுகிறது.

தற்போது வெளியான ஒப்பந்தத்தில், A பிரிவில் சுப்மன் கில், ஜஸ்பரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஏன் கோலி, ரோஹித் B பிரிவு?
மூத்த வீரர்களான விராட் கோலி ரோஹித் சர்மா ஆகியோர் A பிரிவில் சேர்க்கப்படாமல், B பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடி, ODI மற்றும் T20 ஆகிய மற்ற வடிவ போட்டிகளிலும் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே A பிரிவில் இடம் எனவும், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடுவதால் B பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
ODI போட்டிகளில் முக்கியமாக விளையாடி மற்ற போட்டிகளில் அவ்வபோது விளையாடுபவர்களுக்கு B பிரிவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா ஆகியோர் B பிரிவில் இடம் பிடித்துள்ளனர்.
டி20 வடிவத்தில் எப்போதும் ஆடும் வீரர்களும், அவ்வபோது இந்திய அணியில் இடம்பெறும் வீரர்களும் C பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சாய் சுதர்ஷன், சஞ்சு சாம்சன், அக்ஸர் படேல், ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரெல், ஹர்ஷித் ரானா, வருண் சக்ரவர்த்தி, நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் சர்மா ஆகியோர் C பிரிவில் இடம் பிடித்துள்ளனர்.
முஹமது ஷமி, இஷான் கிஷன், ரஜத் படிதார், சர்பராஸ் கான், முகேஷ் குமார் ஆகியோர் மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.




