ஆரியம் நேரடி எதிரி, திமுக துரோகி – திருமாவளவனை விளாசிய நாம் தமிழர்

2 Min Read

நாம் தமிழர் கட்சி மீதான விமர்சனங்களுக்கு அந்த கட்சியின் நிர்வாகி மருத்துவர் கார்த்திகேயன் பதிலளித்துள்ளார்.

நாம் தமிழர் திருச்சி மாநாடு

கட்சி தொடங்கியது முதல் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே களம் காணும் நாம் தமிழர் கட்சி, 2026 சட்டமன்ற தேர்தலிலும், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

ஆரியம் நேரடி எதிரி, திமுக துரோகி - திருமாவளவனை விளாசிய நாம் தமிழர் | Ntk Reacts To Thiruma Claim On Fake Tamil National

பிப்ரவரி 21 ஆம் திகதி திருச்சியில் நடைபெற உள்ள நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்க உள்ளார்.

வழக்கம் போல், 50% ஆண் வேட்பாளர்கள் 50% பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

ஆரியம் நேரடி எதிரி, திமுக துரோகி - திருமாவளவனை விளாசிய நாம் தமிழர் | Ntk Reacts To Thiruma Claim On Fake Tamil National

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி மீதான பல்வேறு விமர்சனங்களுக்கு அந்த கட்சியின் நிர்வாகி மருத்துவர் கார்த்திகேயன் பதிலளித்துள்ளார்.

ஆரியம் நேரடி எதிரி திமுக துரோகி

தவெக அரசியல் களத்திற்கு வந்த பிறகு, நாம் தமிழர் கட்சி திமுகவை விமர்சிப்பதை விடுத்து, தவெகவை விமர்சிப்பதாக மக்கள் கருதுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, நாம் தமிழர் கட்சிக்கு ஆரியம் நேரடி எதிரி, திமுக துரோகி. துரோகியை வீழ்த்தாமல் எதிரியை வீழ்த்த முடியாது என்பதால் திமுகவை எதிர்க்கிறோம்.

தவெகவை சாட்டை துரைமுருகன் ஒரு ஆளாக சமாளித்து விடுவார். அவரை சமாளிக்க முடியாமல் மொத்த தவெகவும் திணறுகிறது. இதுவரை கொள்கை ரீதியாக தவெக எங்களை விமர்சித்ததில்லை என தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் போலி தமிழ் தேசியம் பேசும் கும்பல் என விமர்சித்து வருகிறார் என கேட்கப்பட்ட கேள்விக்கு, திருமாவளவனின் வரையறைப்படி தனி நாடு கேட்பதே தமிழ் தேசியம். அப்படியென்றால் இதுவரை அவர் தனிநாடு கோரிக்கை வைத்துள்ளாரா? அவரின் வரையறைப்படி அவரே போலி தமிழ் தேசியர் தான்.

அனைத்து சாதியினரையும் கோவிலில் அர்ச்சகராக வைத்திருந்த ராஜராஜன் உள்ளிட்ட தமிழ் மன்னர்களை பார்ப்பன அடிமை என பேசுவார்? ஆனால் திராவிட மன்னர்கள் என அழைக்கப்படும் நாயக்க மன்னர்கள் குறித்து பேசமாட்டார்.

ஏனென்றால் திராவிடம் கோபித்து கொள்ளும். இப்படி தமிழ் மன்னர்களை விமர்சித்து திராவிடத்தின் கால்களை இருகப்பற்றிக்கொள்வதா தமிழ் தேசியம்? சீமானுக்கு திருமாவளவன் மீது மரியாதை உள்ளதால் அவரை நாங்கள் விமர்சனம் செய்வதில்லை. எதிர்வினை தான் ஆற்றுகிறோம் என தெரிவித்துள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *