இஸ்ரேலின் இந்த முடிவிற்கு ட்ரம்ப் கடும் எதிர்ப்பு: வெள்ளை மாளிகை திட்டவட்டம்

1 Min Read

மேற்குக் கரையை இணைத்துக்கொள்ளும் இஸ்ரேலின் முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குடியேற்ற விரிவாக்கத்திற்கு

நிலையான மேற்குக் கரை இஸ்ரேலைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். அந்த பிராந்தியத்தில் அமைதியை அடைவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் குறிக்கோளுடன் அந்த முடிவு ஒத்துப்போவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் இந்த முடிவிற்கு ட்ரம்ப் கடும் எதிர்ப்பு: வெள்ளை மாளிகை திட்டவட்டம் | Trump Opposes West Bank Annex

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய கட்டுப்பாட்டை ஆழப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது, இது பாலஸ்தீன பிரதேசத்தில் மேலும் குடியேற்ற விரிவாக்கத்திற்கு வழி வகுத்துள்ளது.

ஏற்கனவே பாலஸ்தீனத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட நாடு தான் இஸ்ரேல். தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள முடிவில், மேற்குக் கரையில் யூத குடிமக்கள் நிலம் வாங்குவதைத் தடுக்கும் பல தசாப்த கால விதிமுறைகளை நீக்குவதும் அடங்கும்.

மட்டுமின்றி, ஹெப்ரான் உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்களின் சில பகுதிகளில் குடியேற்றங்களுக்கான கட்டிட அனுமதிகள் மீதான அதிகாரத்தை பாலஸ்தீன ஆணையத்தின் நகராட்சி அமைப்புகளிடமிருந்து இஸ்ரேலுக்கு மாற்றுவதையும் இந்த சீர்திருத்தங்கள் முன்வைக்கின்றன.

இஸ்ரேலின் இந்த முடிவிற்கு ட்ரம்ப் கடும் எதிர்ப்பு: வெள்ளை மாளிகை திட்டவட்டம் | Trump Opposes West Bank Annex

கடுமையாகக் கண்டிப்பதாக

ஆனால், இஸ்ரேலின் இந்த முடிவை பல நாடுகள் நிராகரித்துள்ளன. மட்டுமின்றி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் சட்டவிரோத இஸ்ரேலிய இறையாண்மையை திணித்தல்,

குடியேற்ற நடவடிக்கைகளை நிலைநிறுத்துதல் மற்றும் ஒரு புதிய சட்ட மற்றும் நிர்வாக யதார்த்தத்தை அமுல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்டவிரோத இஸ்ரேலிய முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளை கடுமையாகக் கண்டிப்பதாக சவுதி அரேபியா, ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், இந்தோனேசியா, பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் திங்களன்று தெரிவித்திருந்தனர்.

இஸ்ரேலின் இந்த முடிவிற்கு ட்ரம்ப் கடும் எதிர்ப்பு: வெள்ளை மாளிகை திட்டவட்டம் | Trump Opposes West Bank Annex

இஸ்ரேலின் இந்த முடிவானது நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோரால் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *