இந்தியா உடன் மோத பாகிஸ்தான் தயார் – T20 உலக கிண்ணத்தில் அதிக வெற்றி பெற்றது யார்?

2 Min Read

இந்தியா உடன் விளையாட பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்த நிலையில், T20 உலக கிண்ணத்தில் இதுவரை இந்தியா பாகிஸ்தான் எத்தனை முறை நேருக்கு நேர் மோதியுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

சம்மதம் தெரிவித்த பாகிஸ்தான்

2026 T20 உலக கிண்ண தொடர் பிப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கி, மார்ச் 6 ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.

இந்தியா உடன் மோத பாகிஸ்தான் தயார் - T20 உலக கிண்ணத்தில் அதிக வெற்றி பெற்றது யார்? | India Vs Pakistan Match T20 Wc Head To Head Record

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் 15ஆம் திகதி இலங்கையில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

முதலில் இந்தியா உடன் விளையாட முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்தது.

அதிக பார்வையாளர்களை ஈர்க்க கூடிய இந்த போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என எச்சரித்த ஐசிசி பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு தொடர்களை மீண்டும் நடத்த வேண்டும். வீரர்கள் கைகுலுக்குவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை பாகிஸ்தான் முன்வைத்தது. ஆனால் இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு தொடர் எங்களது அதிகார வரம்பில் வராது எனக்கூறி இந்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது.

இந்நிலையில், இந்தியா உடனான போட்டியில் பாகிஸ்தான் விளையாடும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், பல தரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் நட்பு நாடுகளின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 15 ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில் பாகிஸ்தான் களமிறங்கும் என தெரிவித்துள்ளது.

இதுவரை T20 உலக கிண்ணத்தில்..

நடப்பு T20 உலக கிண்ணத்தில் A பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலா 1 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. NRR அடிப்படையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியா உடன் மோத பாகிஸ்தான் தயார் - T20 உலக கிண்ணத்தில் அதிக வெற்றி பெற்றது யார்? | India Vs Pakistan Match T20 Wc Head To Head Record

பாகிஸ்தான் இன்று நடைபெற உள்ள போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. இந்தியா நாளை மறுநாள் நடைபெற உள்ள போட்டியில் நமீபியாவை எதிர்கொள்ள உள்ளது.

இந்தியா உடன் மோத பாகிஸ்தான் தயார் - T20 உலக கிண்ணத்தில் அதிக வெற்றி பெற்றது யார்? | India Vs Pakistan Match T20 Wc Head To Head Record

இதுவரை T20 உலக கிண்ணத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 7 போட்டிகளில் இந்தியாவும், 1 போட்டியில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா உடன் மோத பாகிஸ்தான் தயார் - T20 உலக கிண்ணத்தில் அதிக வெற்றி பெற்றது யார்? | India Vs Pakistan Match T20 Wc Head To Head Record

2021 ஆம் ஆண்டு T20 உலக கிண்ண போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலக கிண்ணம் மற்றும் T20 உலக கிண்ணத்தில் இந்தியாவை பாகிஸ்தான் வெற்றி பெற்றது இந்த ஒருமுறை மட்டும்தான்.

இந்தியா உடன் மோத பாகிஸ்தான் தயார் - T20 உலக கிண்ணத்தில் அதிக வெற்றி பெற்றது யார்? | India Vs Pakistan Match T20 Wc Head To Head Record

இதுவரை இந்தியா 2 முறையும், பாகிஸ்தான் ஒருமுறையும் T20 உலக கிண்ணத்தை வென்றுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *