காதலிக்கு ஆயிரம் கோடி ரூபாய்… எப்ஸ்டீன் எழுதி வைத்துள்ள உயில்

2 Min Read

பிரித்தானியா முதலான பல நாடுகளின் அரசியலில் பெரும் குழப்பத்தை உருவாக்கிச் சென்றுள்ள சர்ச்சைக்குரிய நபர், தான் உயிரிழக்கும் முன் தன் காதலிக்காக பெரும் தொகை ஒன்றை உயில் எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

எப்ஸ்டீன் எழுதி வைத்துள்ள உயில்

வேலை தருவதாக வாக்களித்து, பருவம் எய்தாத சிறுமிகள் முதல், இளம்பெண்கள் வரை, ஏராளமானோரை சீரழித்து, அந்தப் பெண்களை அரசியல் பிரபலங்கள் உட்பட தனது நண்பர்கள் பலருக்கும் விருந்தாக்கியவர் அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன்.

காதலிக்கு ஆயிரம் கோடி ரூபாய்... எப்ஸ்டீன் எழுதி வைத்துள்ள உயில் | Epstein Wrote Will For Girl Friend Million Dollars

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சிறையிலடைக்கப்பட்ட எப்ஸ்டீன், 2019ஆம் ஆண்டு ஆகத்து மாதம் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டார்.

இந்நிலையில், அமெரிக்க நீதித்துறை, அவர் தொடர்பிலான, எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் ஆவணங்களை வெளியிட்டுவருகிறது.

அந்த ஆவணங்களில் ஒன்றில், எப்ஸ்டீன் தன் முடிவை தானே தீர்மானிக்கும் முன், தன் சொத்துக்கள் யாருக்குச் செல்லவேண்டும் என்பது குறித்து எழுதிவைத்துள்ள உயில் குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது.

காதலிக்கு ஆயிரம் கோடி ரூபாய்…

குறிப்பாக, எப்ஸ்டீன் தன்னுடைய இளம் காதலியான கரினா (Karyna Shuliak, 36) என்னும் இளம்பெண்ணுக்கு 100 மில்லியன் டொலர்கள் சொத்து எழுதிவைத்துள்ளார்.

100 மில்லியன் டொலர்கள் என்பது இலங்கை மதிப்பில் 30,85,50,30,000.00 ரூபாய் ஆகும்.

காதலிக்கு ஆயிரம் கோடி ரூபாய்... எப்ஸ்டீன் எழுதி வைத்துள்ள உயில் | Epstein Wrote Will For Girl Friend Million Dollars

அத்துடன், எப்ஸ்டீன் கரினாவை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், 32.73 காரட் எடையுள்ள வைரம் பதித்த மோதிரம் ஒன்றை நிச்சயதார்த்தத்துக்காக கரினாவுக்குக் கொடுத்ததாகவும் ஆவணங்கள் கூறுகின்றன.

அத்துடன், கூடுதலாக 48 வைரங்களை கரினாவுக்குக் கொடுத்த எப்ஸ்டீன், ஒருவேளை தங்கள் திருமணம் நடக்கவில்லை என்றாலோ, அல்லது, தான் உயிரிழந்துவிட்டாலோ கரினா அவற்றை தனக்கு சொந்தமாக வைத்துக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

யார் இந்த கரினா?

கரினா, பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். 2012ஆம் ஆண்டு கரினா எப்ஸ்டீனை சந்தித்துள்ளார்.

காதலிக்கு ஆயிரம் கோடி ரூபாய்... எப்ஸ்டீன் எழுதி வைத்துள்ள உயில் | Epstein Wrote Will For Girl Friend Million Dollars

கரினா, பல் மருத்துவம் படிப்பதற்காக எப்ஸ்டீன் பண உதவி செய்துள்ளார். எப்ஸ்டீன் சிறையில் உயிரிழக்கும் முன், கடைசியாக அவர் தொலைபேசியில் அழைத்தது இந்த கரினாவைத்தானாம்.

கரினா, தற்போது நியூயார்க்கில் வசிப்பதாக கருதப்படுகிறது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *