ட்ரம்புக்கு உருக்கமான கோரிக்கை வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட ஈரானியர்

2 Min Read

ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் வலியுறுத்தி சமூக ஊடகங்களில் காணொளி வெளியிட்ட ஈரானியர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

கவனத்தை ஈர்ப்பதே

ஈரானிய ஊடகங்களால் பவுரியா ஹமிதி என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், 10 நிமிடம் மற்றும் 44 வினாடிகள் கொண்ட காணொளியில்,

ட்ரம்புக்கு உருக்கமான கோரிக்கை வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட ஈரானியர் | Iranian Video Appeal To Trump Before

ஈரானில் போராட்டங்கள் மீதான கொடிய ஒடுக்குமுறை மற்றும் நாட்டின் மதகுருமார்களின் தலைமைக்கு எதிராக வெளிநாட்டு தலையீட்டிற்கு அழைப்பு விடுத்து கவனத்தை ஈர்ப்பதே தனது நோக்கம் என்று கூறியுள்ளார்.

நீங்கள் இந்தக் காணொளியை காண நேர்ந்தால், நான் உயிருடன் இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள் என்று ஈரானின் தெற்கு துறைமுக நகரமான புஷேரில் வசிக்கும் ஹமிதி, சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்து வரும் ஒரு காணொளியில் கூறியுள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் போரை விடவும், இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரை விடவும் 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஈரானில் இரண்டு வாரங்கள் நீடித்த போராட்டங்களில் இறந்தனர், கொல்லப்பட்டனர், படுகொலை செய்யப்பட்டனர் என்று அவர் வெளியிடப்பட்ட காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது காணொளிக்கு, இது எனது தியாகம் – தயவுசெய்து, என் நாட்டை விடுவியுங்கள் என தலைப்பிட்டுள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்திடன் நேரடியாக கோரிக்கை வைத்துள்ள ஹமிதி,

ட்ரம்புக்கு உருக்கமான கோரிக்கை வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட ஈரானியர் | Iranian Video Appeal To Trump Before

ஈரானுடனான எந்த ஒரு ஒப்பந்தமும், அரசாங்கங்கத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு செய்யும் துரோகம் என்றார்.

வெளிநாட்டு ஆதரவு

இதனால், காமெனி நிர்வாகத்துடன் எந்த விதமான ஒப்பந்தமும் வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், போராட்டங்களை வலுவாக முன்னெடுங்கள் என அழைப்பு விடுத்தவர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் என குறிப்பிட்டுள்ள ஹமிதி,

ஆனால் ஆயுதமேந்திய படைகளுடன் சண்டையிடுவது சாத்தியமில்லை என்றும், வெளிநாட்டு ஆதரவு இல்லாமல் ஈரானியர்கள் இஸ்லாமிய ஆட்சியை வெல்ல முடியாது என்றும் பதிவு செய்துள்ளார்.

ட்ரம்புக்கு உருக்கமான கோரிக்கை வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட ஈரானியர் | Iranian Video Appeal To Trump Before

அத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளாமல், அமெரிக்கா ஈரானை தாக்குவதுதான் தற்போது எங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை என்று குறிப்பிட்டுள்ள ஹமிதி, இந்த ஆட்சியை நாங்கள் தனியாக எதிர்த்துப் போராட முடியாது.

எங்கள் மக்களுக்கு வெளிநாட்டு தலையீடு தேவை என்றும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், தனது வாழ்க்கைக்கு அர்த்தம் தருவதற்காகவே இந்த காணொளியை உருவாக்கியதாகவும் ஹமிதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஈரானியர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *