உலகளவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உலக நாடுகள் தங்களது ராணுவ மற்றும் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
சமீபத்திய பாகிஸ்தான் உடனான மோதலையடுத்து, இந்தியா தனது பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்தி வருகிறது.
அடுத்த தலைமுறை ஏவுகணை கண்காணிப்பு ரேடார்
தற்போது இந்தியா அடுத்த தலைமுறை ஏவுகணை கண்காணிப்பு ரேடார் அமைப்பை உருவாக்கி வருகிறது.
இது, நவீன ஏவுகணை அச்சுறுத்தல்களை துல்லியமாகக் கண்காணிக்கவும், இடைமறிக்கவும், தடுக்கவும் கருவிகளை முறையாக உருவாக்கி வருகிறது.

இந்த ரேடார் அமைப்பு, தொலைதூரத்திலே ஏவுகணைகளைக் கண்டறிந்து, அதனை கண்காணிக்கவும் இடைமறிப்பாளர்களுக்கு நிகழ்நேர தரவை வழங்கும் வல்லமை உடையது.
இது, இடைநிலை-தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் (IRBM) மற்றும் 5,000 கிலோமீட்டருக்கும் அதிகமான வரம்பு கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBM) எதிர்கொள்ளும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் IRDE போன்ற அதன் சிறப்பு ஆய்வகங்களால் பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு (BMD) அமைப்பின் 2ஆம் கட்ட திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வருகிறது.
இது வழக்கமான வான் கண்காணிப்பு ரேடார்கள் போலல்லாமல் , இந்த அமைப்புகள் உயர்-வேக கண்காணிப்பு , இலக்கு பாகுபாடு மற்றும் இடைமறிப்பு குறியிடுதல் உள்ளிட்ட மூலோபாய ஏவுகணை பாதுகாப்புகளுக்கு உகந்ததாக உள்ளது.



