இந்தியாவுடன் விளையாட 3 நிபந்தனைகளை விதித்த பாகிஸ்தான் – சம்மதிக்குமா இந்தியா?

2 Min Read

T20 உலக கிண்ணத்தில் இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் 3 நிபந்தனைகளை விதித்துள்ளது.

இந்தியா போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தான்

2026 T20 உலக கிண்ண தொடர் கடந்த பிப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கி, மார்ச் 6 ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.

இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் 15ஆம் திகதி இலங்கையில் நடைபெற உள்ளது.

இந்தியாவுடன் விளையாட 3 நிபந்தனைகளை விதித்த பாகிஸ்தான் - சம்மதிக்குமா இந்தியா? | Pakistan Set 3 Demands To Icc For Play With India

இந்தியாவிற்கு வந்து விளையாட முடியாது என்பதால், T20 உலக கிண்ண தொடரை புறக்கணிப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்ததையடுத்து, வங்கதேசத்தை நீக்கிவிட்டு ஸ்காட்லாந்தை தொடரில் சேர்த்தது ஐசிசி.

இதனையடுத்து, இந்தியாவிற்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

3 நிபந்தனைகள்

இதனால், பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என ஐசிசி எச்சரித்தது. இந்நிலையில், லாகூரில் நடைபெற்ற ஐசிசி அதிகாரிகளுடனான கூட்டத்தில் இந்தியா உடன் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 3 நிபந்தனைகளை விதித்துள்ளது.

இந்தியாவுடன் விளையாட 3 நிபந்தனைகளை விதித்த பாகிஸ்தான் - சம்மதிக்குமா இந்தியா? | Pakistan Set 3 Demands To Icc For Play With India

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு தொடர்களை மீண்டும் நடத்த வேண்டும்.

இந்தியாவுடன் விளையாட 3 நிபந்தனைகளை விதித்த பாகிஸ்தான் - சம்மதிக்குமா இந்தியா? | Pakistan Set 3 Demands To Icc For Play With India

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்து சர்ச்சையான நிலையில், இந்த தொடரில் நடைபெற்ற கைகுலுக்கல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

இந்தியாவுடன் விளையாட 3 நிபந்தனைகளை விதித்த பாகிஸ்தான் - சம்மதிக்குமா இந்தியா? | Pakistan Set 3 Demands To Icc For Play With India

ஐசிசி வருவாயில் கூடுதல் பங்கு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும், வங்கதேச கிரிக்கெட் வாரியமும், ஐசிசியிடமிருந்து கூடுதல் நிதி, டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்ட போதிலும் அதற்கான பங்கேற்பு கட்டணம் வேண்டும், எதிர்கால ஐசிசி தொடர்களை நடத்தும் உரிமை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

பாகிஸ்தானின் இந்த கோரிக்கை தொடர்பாக பிசிசிஐ உடன் ஐசிசி ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்தியாவுடன் விளையாட 3 நிபந்தனைகளை விதித்த பாகிஸ்தான் - சம்மதிக்குமா இந்தியா? | Pakistan Set 3 Demands To Icc For Play With India

2008 மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடர்களில் விளையாடுவதில்லை. IPL தொடரில் பாகிஸ்தான் வீரர்களை அனுமதிப்பதில்லை.

இந்தியாவுடன் விளையாட 3 நிபந்தனைகளை விதித்த பாகிஸ்தான் - சம்மதிக்குமா இந்தியா? | Pakistan Set 3 Demands To Icc For Play With India

அதே போல் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடாது என அறிவித்துள்ளது. இதே போல் இந்தியாவில் விளையாட பாகிஸ்தானும் மறுப்பு தெரிவித்தது. இதனால் இரு நாடுகளும் விளையாடும் போட்டிகள், வேறு ஒரு பொதுவான நாட்டில் நடைபெறும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளுக்கு உலகளவில் பெரும் பார்வையாளர்கள் உண்டு. இந்த போட்டிகளில் பாரிய வருமானம் கிடைக்கும்.

இதனை கருத்தில் கொண்டு, மீண்டும் இந்தியா பாகிஸ்தான் இடையே இருதரப்பு போட்டிகள் நடைபெறுவதாக இருந்தால், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற இரு நாடுகளுக்கும் பொதுவான ஒரு இடத்தில் நடைபெறலாம்.

பாகிஸ்தான் அரசு உடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கலந்தாலோசித்து விரைவில் இறுதி முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *