ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன?

1 Min Read

பாபா வங்காவின் கணிப்புகளை மெய்யாக்கும் வகையில் 2026 ம் ஆண்டு தங்கம், வெள்ளி மற்றும் பிற உலோகங்களின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது.

பாபா வங்காவின் கணிப்பு

பிரபல பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்காவின் கணிப்புகள் பல அவர் சொன்ன படியே நிஜமாகி வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் 2026 ம் ஆண்டு உலக அளவில் ரொக்க பணங்களின் மதிப்பு குறைந்து தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற உலோகங்களில் மக்கள் அதிக அளவு முதலீடு செய்ய தொடங்குவார்கள் எனவும் இதனால் அவற்றின் விலை உச்சத்தை தொடும் என்று கணித்து இருந்தார்.

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? | Baba Vanga Prediction About Gold Price Soaring

அவரது கணிப்புகளை மெய்யாக்கும் வகையில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் ரூ.1,59,100 ஆகவும், 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,44,929 ஆகவும், 1 கிலோ தாமிரத்தின் விலை ரூ.1,242 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், பல்வேறு நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் சூழல் மற்றும் அரசிய நிலையற்ற தன்மை காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டு இருப்பதாக பல்வேறு பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்தது என்ன?

பாபா வங்காவின் கணிப்பு படி 2026 ம் ஆண்டு உலக பொருளாதாரம் பெரும் சரிவை சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சர்வதேச பொருளாதார சந்தைகள் பாதிக்கப்பட்டு பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்றும் இதனால் பல்வேறு நாடுகள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பொருளாதார மந்த நிலை காரணமாக உலக நாடுகள் இடையே போர் ஏற்படும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *