வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: ஜப்பான் பிரதமருக்கு வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திர மோடி

1 Min Read

ஜப்பான் நாடாளுமன்றத் தேர்லில் வெற்றி பெற்ற சனே தகைச்சிக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சனே தகைச்சி

லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைமையிலான ஆளும் கூட்டணி, ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Sane Takaichi

இதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜப்பான் பெண் பிரதமர் என்ற சிறப்பை சனே தகைச்சி பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் (Narendra Modi) தனது வாழ்த்துக்களை சனே தகைச்சிக்கு தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

அவரது பதிவில், “பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் நீங்கள் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு சனே தகைச்சிக்கு எனது வாழ்த்துகள்!

நமது சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மை, உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்துவதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.

உங்கள் திறமையான தலைமையின் கீழ், இந்தியா-ஜப்பான் நட்புறவை மேலும் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்வோம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *