இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா? 24 மணிநேரத்தில் முடிவு

1 Min Read

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவது குறித்து பாகிஸ்தான் 24 மணிநேரத்தில் இறுதி முடிவெடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் அணி

2026 டி20 உலகக்கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி 15ஆம் திகதி நடைபெற உள்ளது.

India vs Pakistan, T20 world cup 2026

ஆனால் இந்தப் போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அணி கூறியது, கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, இந்த போட்டி ரத்தானால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்ற கவலை எழுந்தது. இதற்காக பாகிஸ்தானின் லாகூரில் 5 மணிநேரத்திற்கும் மேலாக விவாதங்கள் நீடித்தது.

ஐசிசி துணைத் தலைவர்

இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் குவாஜா மற்றும் வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் அமினுல் இஸ்லாம் ஆகியோர் பங்கேற்றனர்.

India vs Pakistan, T20 world cup 2026

அறிக்கைகளின்படி, இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு PCB இப்போது பாகிஸ்தான் மத்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அடுத்து 24 மணிநேரத்தில் பாகிஸ்தான் தீர்க்கமான முடிவை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

India vs Pakistan, T20 world cup 2026

India vs Pakistan, T20 world cup 2026

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *