விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை

1 Min Read

எப்ஸ்டீன் தன்னுடைய விந்தணுக்கள் மூலம் Super Race-ஐ உருவாக்க திட்டமிட்டு இருந்த பகீர் பின்னணி தெரியவந்துள்ளது.

சர்ச்சையை ஏற்படுத்திய எப்ஸ்டீன்

சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை கடத்தி பெரும் பணக்காரர்களுக்கு  விருந்தாக்கிய ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பல லட்சம் பக்கங்கள் கொண்ட கோப்புகள் ஒவ்வொரு பகுதியாக வெளியிடப்பட்டு வருகிறது.

அமெரிக்கா நீதித்துறை வெளியிட்ட புகைப்படங்கள், ஆவணங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய இந்த எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பில்கேட்ஸ், எலான் மஸ்க், அனில் அம்பானி மற்றும் பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை | Epstein Planned To Create Super Human Race

இந்நிலையில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகள் மூலம் புதிய பகீர் பின்னணி தெரியவந்துள்ளது.

விந்தணுக்கள் மூலம் Super Race

அதில், உயிரிழந்த ஜெப்ரி எப்ஸ்டீன் தன்னுடைய விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட தகவலில், ஜெப்ரி எப்ஸ்டீனுக்கு சொந்தமான  10,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட நியூ மொக்சிகோவின் ஜோரோ ராஞ்ச் எஸ்டேட்டில் 20 பெண்களை திட்டமிட்டு தேர்ந்தெடுத்து Super Race மனித இனத்தை உருவாக்குவது தொடர்பான திட்டத்தை செயல்படுத்த ஜெப்ரி எப்ஸ்டீன் திட்டமிட்டுள்ளார்.

விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை | Epstein Planned To Create Super Human Race

இந்த பெண்களை கருத்தரிக்க வைத்து மரபணு தொழில்நுட்பம் மூலமாக அவர்களின் கர்ப்ப காலத்திலேயே குழந்தைகளுக்கு அசாதாரண ஆற்றலையும், அறிவையும் வழங்கி Super Race மனித இனத்தை உருவாக்க ஜெப்ரி எப்ஸ்டீன் விரும்பியுள்ளார்.

ஜெப்ரி எப்ஸ்டீன் தன்னுடைய திட்டத்திற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முன்னணி அறிவியல் விஞ்ஞானிகளுக்கு தன்னுடைய தனித்தீவில் விருந்தளித்துள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *