இலங்கை வரும் உலக வங்கி குழு: அநுரகுமார திஸாநாயக்க சந்திப்பு எதற்கு தெரியுமா?

1 Min Read

நாட்டில் தடைப்பட்ட வளர்ச்சி திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்காக அடுத்த மாதம் இலங்கைக்கு உலக வங்கி குழு இலங்கை வரவுள்ளது.

இலங்கை வரும் உலக வங்கி குழு

2022 முதல் 2023ம் ஆண்டு வரை நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக சாலைகள், கல்வி, உள்கட்டமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இதனை மீண்டும் தொடங்குவதற்காக  அடுத்த மாதம் உலக வங்கி குழு இலங்கை வரவுள்ளது.

உலக வங்கிக் குழுவின் இந்த வருகையை தொடர்ந்து, டிட்வா புயலா ஏற்பட்ட 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சேதங்கள் மற்றும் அதற்கான நிதி உதவி குறித்து இலங்கை அரசு விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை வரும் உலக வங்கி குழு: அநுரகுமார திஸாநாயக்க சந்திப்பு எதற்கு தெரியுமா? | World Bank Team Visit Sri Lanka For Development

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா பிப்ரவரி 17ஆம் திகதி இலங்கை வருகிறார்.

ஜனாதிபதி அநுர உடன் சந்திப்பு

இலங்கை வரும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா 18ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடுவார்.

இந்த சந்திப்பின் மூலம்  5வது மற்றும் 6வது மீளாய்வுகள் வெற்றிகரமாக முடிந்தால், இலங்கைக்கு சுமார் 350 மில்லியன் டொலர் வீதம் மொத்தம் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கும். இலங்கையில் ஏற்பட்ட புயல் சேதங்கள், இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகளை மீண்டும் வேகப்படுத்தவும், சர்வதேச அமைப்புகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *