கிரீஸில் ரோந்து படகு மீது மோதிய அகதிகள் படகு: 15 பேர் வரை நீரில் மூழ்கி உயிரிழப்பு

1 Min Read

கிரீஸ் நாட்டில் ரோந்து படகு மீது அகதிகள் படகு மோதிய விபத்துக்குள்ளானதில் 15 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

ரோந்து படகு மீது மோதிய அகதிகள் படகு

கிரீஸ் நாட்டின் கடலோர காவல் படையினரின் ரோந்து படகு ஒன்று, ஏஜியன் கடலில் சியோஸ் தீவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது.

அப்போது அகதிகள் சிலரை ஏற்றிக்கொண்டு வந்த சிறிய படகு ஒன்று ரோந்து கப்பல் மீது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தை தொடர்ந்து கடலில் மூழ்கி 11 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட  14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

கிரீஸில் ரோந்து படகு மீது மோதிய அகதிகள் படகு: 15 பேர் வரை நீரில் மூழ்கி உயிரிழப்பு | Refugee Boat Collides With Patrol Boat 15 Dead

மீட்பு மற்றும் தேடுதல் தீவிரம்

அதே சமயம், விபத்தில் சிக்கிய 11 குழந்தைகள் உட்பட 26 பேர் பாதுகாப்பாக கடலில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 7 குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 2 கடலோர காவல் படை அதிகாரிகளும் அடங்குவர்.

காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது, தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக ரோந்து படகுகள், நீச்சல் வீரர்கள், மற்றும் ஹெலிகாப்டர் ஒன்றும் ஈடுபட்டு வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *