துபாய் பட்டத்து இளவரசரிடம் உலக ஆசிரியர் பரிசு பெற்ற இந்திய பெண்மணி

1 Min Read

உலக அரசாங்க உச்சி மாநாட்டில் இந்திய ஆசிரியரான ரூபிள் நாகி, துபாய் பட்டத்து இளவரசரிடம் உலக ஆசிரியர் பரிசு பெற்றார்.

உலக ஆசிரியர் விருது

உலக அரசாங்க உச்சி மாநாடு புதன்கிழமை துபாயில் நடந்தது. இதில் 139 நாடுகளில் இருந்து பெறப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் மற்றும் விண்ணப்பங்களில் இருந்து இந்திய ரூபிள் நாகி “உலக ஆசிரியர் பரிசு” பெற தேர்வு செய்யப்பட்டார்.

indian teacher received award from dubai prince

இவர் கலை அறக்கட்டளை மூலம் இந்தியா முழுவதும் 800க்கும் மேற்பட்ட கல்வி மையங்களை நிறுவியுள்ளார்.

இதன்மூலம் 100க்கும் மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட சமூகங்கள் மற்றும் கிராமங்களில் பாதுகாப்பான மற்றும் ஊக்கமளிக்கும் இடங்களை அவர் வழங்கியுள்ளார்.

இந்திய ஆசிரியர்

ரூபிள் நாகி கடந்த இரண்டு தசாப்தங்களாக, கலையை ஒரு கல்வி கருவியாகப் பயன்படுத்தி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளை முறையான கல்விக்குள் ஒருங்கிணைக்க அவர் உதவியுள்ளார்.

இதன்மூலம் அவர் ஆற்றிய கல்வி பணிக்காக 2026ஆம் ஆண்டுக்கான உலக ஆசிரியர் பரிசினை, துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூதூமிடம் இருந்து பெற்றார்.

மேலும் ரூபிள் நாகி ஒரு மில்லியன் டொலரையும் வென்றார். ரூபிள் நாகி 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும், தன்னார்வலர்களையும் நியமித்து பயிற்சி அளித்துள்ளார்.

indian teacher received award from dubai prince

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *