ருத்ரதாண்டவம் ஆடிய டாம் லாதம், நிக்கோல்ஸ்! 384 ஓட்டங்கள் குவித்து இமாலய வெற்றி

1 Min Read

தி ஃபோர்ட் டிராபி தொடர் போட்டியில் கான்டெர்பரி அணி 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆக்லாந்தை வீழ்த்தியது.

லாதம், நிக்கோல்ஸ் கூட்டணி

ஆக்லாந்து மற்றும் கான்டெர்பரி அணிகள் மோதிய தி ஃபோர்ட் டிராபி போட்டி ஈடன் பார்க் அவுட்டர் ஓவல் மைதானத்தில் நடந்தது.

Tom Latham

முதலில் களமிறங்கிய கான்டெர்பரி அணியில் ரைஸ் மரியு 45 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் கூட்டணி சரவெடி கூட்டணி அமைத்தது.

ஹென்றி நிக்கோல்ஸ் (Henry Nicholls) நிதானமாக ஓட்டங்களை சேர்க்க, டாம் லாதம் (Tom Latham) அதிரடியில் மிரட்டினார்.

Henry Nicholls

சதம் விளாசிய நிக்கோல்ஸ் 118 பந்துகளில் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 122 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த மேத்யூ போய்ல் 32 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் விளாச, டாம் லாதமும் சதம் அடித்தார்.

கான்டெர்பரி வெற்றி

இதன்மூலம் கான்டெர்பரி அணி 50 ஓவர்களில் 384 ஓட்டங்கள் குவித்தது. டாம் லாதம் 75 பந்துகளில் 2 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 104 ஓட்டங்கள் விளாசினார்.

Tom Latham

பின்னர் ஆக்லாந்து அணி களமிறங்கியபோது மழை குறுக்கிட்டது. இதனால் 21 ஓவர்களில் 209 ஓட்டங்கள் என வெற்றி இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

ஆனால், கோல் மெக்கொன்சி மற்றும் ஹர்பரின் ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சில் ஆக்லாந்து அணி 19.3 ஓவர்களில் 124 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக சீன் சோலியா (Sean Solia) 48 ஓட்டங்கள் எடுத்தார். மெக்கொன்சி, ஹர்பர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆக்லாந்து அணி DLS முறையில் 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Auckland vs Canterbury, 2025-26

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *