$70,000 கீழ் குறைந்த பிட்காயின் மதிப்பு: தடுமாற்றத்தில் கிரிப்டோ சந்தை

1 Min Read

உலக கிரிப்டோ சந்தைகளில் ஏறுமுகத்தில் இருந்த பிட்காயின் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது.

பிட்காயின் மதிப்பு சரிவு

கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய ஏற்றத்தை கண்ட பிட்காயின்(Bitcoin) முதல் முறையாக மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.

2024ம் ஆண்டு  பிறகு முதல்முறையாக வியாழக்கிழமை அன்று பிட்காயின் மதிப்பு $70,000 என்ற ஆதரவு நிலைக்கு கீழ் அதாவது 69,955.31 என்ற நிலைக்கு சென்றுள்ளது.

$70,000 கீழ் குறைந்த பிட்காயின் மதிப்பு: தடுமாற்றத்தில் கிரிப்டோ சந்தை | Bitcoin Value Slipping Below 70000 Mark 1St Time

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பிட்காயின் மதிப்பு 25%க்கும் மேல் குறைந்துள்ளது, முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலீட்டாளர்கள் ஆர்வம் குறைவது ஏன்?

உலக அளவில் நிலவி வரும் பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களே பிட்காயின் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணமாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

முக்கியமாக அமெரிக்காவில் நிலவி வரும் பணவீக்கம், குறைவான வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவை முதலீட்டாளர்களுக்கு கிரிப்டோ சொத்தின் மீதான ஆர்வத்தை குறைத்துள்ளது.

மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எப்போது அடுத்த பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவரை தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பும் சந்தையில் நிலவுகிறது, ஏனென்றால், இந்த தேர்வுக்கு பிறகு தான் அடுத்தடுத்த ஆண்டுகளின் நிதிக்கொள்கை தீர்மானிக்கப்படும் என்பதால் முதலீட்டாளர்கள் கவனமுடன் காத்திருக்கின்றனர்.

அத்துடன் உலக அளவில் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டு வரும் மோதல் காரணமாகவும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி திரும்பியுள்ளனர்.

இரண்டாவது மிகப்பெரிய கிரிப்டோவான எதிரியமும்(Ethereum – $2,073) வீழ்ச்சியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *