தவெக 2026 தேர்தல் அறிக்கை – பிரத்தியேக இணையதளம் அறிமுகம்

2 Min Read

2026 தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை வழங்க தவெக பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

2026 தேர்தல் அறிக்கை

ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் கட்சிகள் தாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், செய்ய உள்ள திட்டங்கள் குறித்து தேர்தல் அறிக்கையாக வெளியிடுவார்கள்.

இந்த தேர்தல் அறிக்கைகள் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் உருவாக்கப்படும். இது தேர்தலில் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படும்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

dmk election manifesto 2026

ஆளுங்கட்சியான திமுக, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தலைமையிலான 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைத்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த குழு மக்களிடம் கருத்துக்களைக் கேட்டு வருகிறது.

மேலும், https://www.dmk.in/ta/manifesto2026 என்ற இணையதளத்தின் மூலம் மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சியான அதிமுக, நகர்ப்புற பேருந்துகளில் ஆண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட 10 வாக்குறுதிகளை 2 கட்டங்களாக தற்போது வரை வெளியிட்டுள்ளது.

aiadmk election manifesto 2026

திருச்சியில் பிப்ரவரி 21 ஆம் திகதி நடைபெற உள்ள மாநாட்டில் நாம் தமிழர் கட்சி 234 வேட்பாளர்களையும் அறிவிக்க உள்ளது. விரைவில் தேர்தல் அறிக்கையையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணையதளத்தை அறிமுகப்படுத்திய தவெக

விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் முதல் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், அந்த கட்சியின் தேர்தல் அறிக்கை மீதும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தவெக 2026 தேர்தல் அறிக்கை - பிரத்தியேக இணையதளம் அறிமுகம் | Tvk Launched Website Mail For Election Manifesto

தவெக தலைவர் விஜய் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்து, இந்த குழு தமிழ்நாடு முழுவதும் பயணித்து மக்களிடம் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் என அறிவித்தார்.

தற்போது பொதுமக்கள் தேர்தல் அறிக்கை தொடர்பாக தங்கள் பரிந்துரைகளை https://tvkmanifesto2026.com என்ற பிரத்யேக இணையதளத்தில் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் அதிகளவிலான பயனர்கள் பயன்படுத்தப்படுவதால் இணையதளம் ஸ்தம்பித்துள்ள நிலையில் tvkmanifesto2026@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் பொதுமக்கள் பரிந்துரைகளை அனுப்பலாம் என தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *