T20 உலக கிண்ணம் – முறியடிக்கப்பட முடியாத 3 சாதனைகள்

2 Min Read

2026 T20 உலக கிண்ண தொடர் வரும் பிப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கி மார்ச் 6 ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.

2026 t20 world cup captains group photo

இதில், 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளது. 2024 T20 உலக கிண்ணத்தை வென்று இந்திய அணி நடப்பு சாம்பியனாக உள்ளது.

2007 முதல் T20 உலக கிண்ணம் நடைபெற்று வரும் நிலையில், T20 உலக கிண்ணத்தில் 3 சாதனைகள் முறிக்கப்படமுடியாத சாதனையாக கருதப்படுகிறது.

யுவராஜ் சிங்கின் சாதனை

2007 T20 உலக கிண்ண தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் யுவராஜ் சிங், 12 பந்துகளில் அரை சதம் விளாசினார்.

yuvaraj singh fastest half century record in t20 world cup

இதுவே தற்போது வரை T20 உலக கிண்ண தொடரின் அதிவேக அரைசதமாக உள்ளது. இதில், ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி அதிரடி காட்டினார்.

இலங்கையின் சாதனை

2007 ஆம் ஆண்டில் இலங்கை மற்றும் கென்யாவிற்கு இடையேயான போட்டியில், இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 260 ஓட்டங்கள் குவித்தது.

261 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கென்யா அணி, 19.3 ஓவர்களில் 88 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

srilanka high score record in t20 world cup

172 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதுவே T20 உலக கிண்ண வரலாற்றில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக உள்ளது.

மேலும், இலங்கை குவித்த 260 ஓட்டங்களே, தற்போது வரை ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஓட்டமாக உள்ளது.

லாக்கி பெர்குசனின் சாதனை

2024 T20 உலக கிண்ண தொடரில், நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியாவிற்கு இடையேயான போட்டியில், நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசன் 4 ஓவர்கள் வீசி, ஒரு ஓட்டம் கூட விட்டுக்கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Lockie Ferguson bowling record in t20 world cup

இதன் மூலம், 0 பந்துவீச்சு பொருளாதாரம் வைத்துள்ள அவரின் சாதனை முறியடிக்கப்பட முடியாததாக கருதப்படுகிறது.

இது தவிர்த்து, ப்ரெண்டன் மெக்குல்லத்தின் 123 ஓட்டங்கள், இந்தியா ஒரு தொடரில் பெற்ற அதிகபட்ச வெற்றி(8) உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் 2026 T20 உலககிண்ண தொடரில் முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *