ஒரு ஜோடி கொலுசுக்காக… பெண்ணுக்கு நிகழ்ந்த பயங்கரம்

1 Min Read

இந்தியாவின் ராஜஸ்தானில், ஒரு ஜோடி கொலுசுக்காக பெண்ணொருவர் கொடூரமாக கொல்லப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

ஒரு ஜோடி கொலுசுக்காக…

ராஜஸ்தானிலுள்ள Kodyai என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலா தேவி (60). செவ்வாய்க்கிழமையன்று, அருகிலுள்ள வனப்பகுதிக்கு ஆடு மேய்க்கச் சென்ற கமலா வீடு திரும்பாததால், தாயைத் தேடிச் சென்றுள்ளார் அவரது மகனான ஹன்ஸ் ராஜ்.

ஒரு ஜோடி கொலுசுக்காக... பெண்ணுக்கு நிகழ்ந்த பயங்கரம் | Rajasthan Women Legs Chopped Off For Silver Anklet

தாயைத் தேடிச் சென்ற ராஜுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், கழுத்தறுபட்ட நிலையில் உயிரிழந்து கிடந்த கமலாவின் கால்கள் இரண்டும் வெட்டப்பட்டிருந்தன.

தகவலறிந்த பொலிசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைய, அதற்குள் அங்கு குவிந்த கிராம மக்கள் கமலாவின் உடலுடன் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.

கமலா அணிந்திருந்த ஒரு ஜோடி கொலுசு காணாமல் போயுள்ளதால், கொலுசுக்காக இந்த பயங்கரம் அரங்கேறியிருக்கலாம் என கருதப்படுகிறது.

சுமார் 2.5 கிலோகிராம் எடையுள்ள அந்த கொலுசுகள் 6.5 லட்ச ரூபாய் மதிப்புள்ளவை ஆகும்.

பொலிசார் இந்த பயங்கர சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *