மூன்று சிறுவர்களால் சிறுமிக்கு நிகழ்ந்த பயங்கரம்: தாய் ஒருவர் எடுத்த முடிவு

1 Min Read

உலக நாடுகள் பல சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.

அப்படிச் செய்யவில்லையென்றால், சமூக ஊடகங்கள் பிள்ளைகளுக்கு மோசமான விடயங்கள் அனைத்தையும் கற்றுக்கொடுத்துவிடுமோ என அஞ்சத் தோன்றுகிறது.

திரைப்படங்களை திரையரங்கிலோ அல்லது தொலைக்காட்சியிலோ பார்த்தால் அவற்றிற்கு சென்சார் உள்ளது. ஆனால், சமூக ஊடகங்கள் பலவற்றில் அப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இல்லை.

அதனால், ஒரு பக்கம் தவறான விடயங்களை பிள்ளைகள் கற்றுக்கொள்வதுடன், சில விடயங்களைச் செய்வது தவறில்லை, அதுவும் வாழ்க்கையில் ஒரு சாதாரண விடயம் என்னும் மனப்போக்கு இந்த திரைப்படங்களையும் சீரியல்களையும் பார்க்கும் பிள்ளைகளுக்கு தாமாகவே ஏற்பட்டுவிடுகிறதோ என்னவோ?

சிறுமிக்கு நிகழ்ந்த பயங்கரம்

இந்தியாவின் டெல்லியிலுள்ள பஜன்புரா என்னும் இடத்தில், 6 வயது சிறுமி ஒருத்தியை முறையே, 10, 13 மற்றும் 16 வயதுள்ள மூன்று சிறுவர்கள் வன்புணர்ந்துள்ளார்கள்.

மூன்று சிறுவர்களால் சிறுமிக்கு நிகழ்ந்த பயங்கரம்: தாய் ஒருவர் எடுத்த முடிவு | Woman Hands Over Accused Son To Delhi Police

இரத்தம் சொட்டச் சொட்ட வீட்டுக்கு வந்த குழந்தையை தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, உண்மை தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், நடந்ததை அறிந்து, பிள்ளையின் நிலைமையைக் கண்டு அதிர்ந்த அந்த சிறுவர்களில் ஒருவனான 10 வயது சிறுவனின் தாய், தானாக முன்வந்து, அந்த சிறுமியின் பெற்றோருக்கு ஆதரவாக, தன் மகனை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சிறுவர்கள் இப்படி ஒரு பயங்கர குற்றத்தில் ஈடுபட்ட விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், 10 மற்றும் 13 வயதுடைய அந்த இரண்டு சிறுவர்களும் சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்கள்.

அந்த சிறுவர்களில் மூத்தவனான 16 வயது சிறுவன் மட்டும் தப்பியோடிவிட்டான். அவனை பொலிசார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *