கனடா நிர்ணயித்த இலக்கை 18 ஓவர்களிலேயே எட்டிய நேபாளம்: உலகக்கிண்ண பயிற்சி போட்டியில் மிரட்டல்

1 Min Read

டி20 உலகக்கிண்ண பயிற்சி போட்டியில் நேபாள அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தியது.

தலிவால், ஷ்ரேயாஸ் அதிரடி

சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடந்த டி20 உலகக்கிண்ண பயிற்சி போட்டியில், கனடா மற்றும் நேபாளம் அணிகள் மோதின.

Canada vs Nepal, Warm up match 2026

முதலில் ஆடிய கனடா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்தது.

நவ்நீத் தலிவால் 41 (36) ஓட்டங்களும், ஷ்ரேயாஸ் மொவ்வா 19 பந்துகளில் 38 ஓட்டங்களும் விளாசினர்.

நேபாளம் வெற்றி

சந்தீப், குஷால் தலா 2 விக்கெட்டுகளும், சோம்பல் மற்றும் நந்தன் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் களமிறங்கிய நேபாள அணியில் அதிரடியில் மிரட்டிய ஆசிப் ஷெய்க் 29 பந்துகளில் 58 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 6 பவுண்டரிகள்) விளாசினார்.

அடுத்து சந்தீப் ஜோரா 44 (30) ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழக்க, குல்ஸான் ஜா ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 31 ஓட்டங்கள் விளாசி, நேபாளம் 18 ஓவர்களிலேயே 162 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Canada vs Nepal, Warm up match 2026

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *