ஜிம்பாப்வே அணியை கொழும்பில் அதிரடியாக வீழ்த்திய ஓமன்! தெறிக்கவிட்ட ஜதிந்தர் சிங்

1 Min Read

டி20 உலகக்கிண்ணப் பயிற்சி ஆட்டத்தில் ஓமன் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.

பென்னெட் அதிரடி

கொழும்பில் ஜிம்பாப்வே மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.

Zimbabwe vs Oman, T20 world cup warm up 2026

முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணியில் பிரெண்டன் டெய்லர் 26 ஓட்டங்களில் ரிட்டையர்டு அவுட் முறையில் வெளியேற, பிரையன் பென்னெட் (Brian Bennett) அதிரடியில் மிரட்டினார்.

அவர் 28 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழக்க விக்கெட்டுகள் சரிந்தன. ஆறாவது வீரராக களமிறங்கிய தஷிங்கா முசேகிவா ருத்ரதாண்டவம் ஆடினார்.

இதன்மூலம் அணியின் ஸ்கோர் விரைவாக உயர, ஜிம்பாப்வே 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் குவித்தது.

Zimbabwe vs Oman, T20 world cup warm up 2026

முசேகிவா 54 ஓட்டங்கள்

தஷிங்கா முசேகிவா (Tashinga Musekiwa) ஆட்டமிழக்காமல் 28 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் விளாசினார். சுஃப்யான் மெஹ்மூத் 3 விக்கெட்டுகளும், நதீம் கான் 2 விக்கெட்டுகளும், ஷா பைசல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய ஓமன் அணியில் ஜதிந்தர் சிங் 33 பந்துகளில் 55 ஓட்டங்களும், ஹம்மத் மிர்சா 25 பந்துகளில் 35 ஓட்டங்களும் விளாசினார்.

ஜித்தேன் ரமணன்டி ஆட்டமிழக்காமல் 18 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்கள் விளாச, ஓமன் அணி 19.2 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

Zimbabwe vs Oman, T20 world cup warm up 2026

Zimbabwe vs Oman, T20 world cup warm up 2026

Zimbabwe vs Oman, T20 world cup warm up 2026

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *