இந்தியா-GCC இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்- விதிமுறைகள் கையெழுத்து

1 Min Read

இந்தியா மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்க புதிய விதிமுறைகள் (Terms of Reference) கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், இரு தரப்புகளுக்கும் பொருட்கள், சேவைகள் மற்றும் முதலீடுகள் சுதந்திரமாக பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பை அதிகரிக்கும்.

இந்தியாவின் வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், “இது வரலாற்று சிறப்புமிக்க நாள். இது இந்தியா மற்றும் GCC நாடுகள் இடையே வலுவான வர்த்தக உறவை உருவாக்கும் முக்கியமான படியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

GCC-யில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அம்மீறக்கம், கத்தார், குவைத், ஓமன், பஹ்ரைன் ஆகிய ஆறு நாடுகள் அடங்குகின்றன.

India GCC FTA talks 2026, India GCC free trade agreement news, India GCC trade deal negotiations today, India GCC economic cooperation agreement, India GCC free trade pact

இந்த ஒப்பந்தம் மூலம், குறிப்பாக உணவு பதப்படுத்தல், பெட்ரோ ரசாயனங்கள், உற்பத்தி துறை போன்றவற்றில் இந்தியாவுக்கு அதிக சந்தை அணுகல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பியூஷ் கோயல் மேலும் கூறியதாவது, “இந்த ஒப்பந்தம், இந்திய விவசாயிகள், மீனவர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSMEs) ஆகியோருக்கு பெரும் ஆதரவாக இருக்கும். இது இந்தியாவின் பொருளாதாரத்தை நவீனப்படுத்தும் முக்கியமான முயற்சி” என கூறியுள்ளார்.

தற்போது இந்தியா, 9 சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் 38 நாடுகளுடன் வர்த்தக உறவை கொண்டுள்ளது. GCC உடன் கையெழுத்திடப்பட்டுள்ள புதிய ToR, இந்தியாவின் உலகளாவிய வர்த்தக விரிவாக்கத்தில் முக்கிய பங்காற்றும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *