ஜூலை 2025 மேல் சபைத் தேர்தலில், 20 வயதுக்குட்பட்டவர்களிடையே வாக்குப்பதிவு 52 சதவீதமாக உயர்ந்தது, இது 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பதிவான வாக்குகளிலிருந்து சுமார் 14 சதவீதம் அதிகமாகும்.

1 Min Read

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில், இந்த ஆண்டின் முதல் 15 நாட்களுக்குள் 500க்கு மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

15 நாட்களில் 500 பெண்கள் மாயம்…

புதுடெல்லியில், 2026ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் மட்டும், 807 பேர் காணாமல் போயுள்ளார்கள்.

அவர்களில் மூன்றில் இரண்டு பகுதி, அதாவது, 509 பேர் பெண்களும் சிறுமிகளும்!

15 நாட்களில் 500 பெண்கள் மாயம்... அதிரவைத்துள்ள ஒரு தகவல் | Police Data Says 500 Womens Missing In Delhi 15Day

காணாமல் போன 807 பேரில், இதுவரை 235 பேர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 572 பேரைக் குறித்து எந்த தகவலும் இல்லை.

காணாமல் போனவர்களில் 18 வயதுக்குக் கீழுள்ளவர்கள் மட்டும் 191 பேர். அவர்களில் 146 பேர் சிறுமிகள், 45 பேர் சிறுவர்கள்.

ஆக, இந்திய தலைநகரில், 2026ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களுக்குள் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ள விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *