ரூ.6 லட்சம் காருக்கு ரூ.2 கோடியில் நம்பர் பிளேட் – வாங்கியது யார் தெரியுமா?

1 Min Read

இந்தியாவில், ரூ.6 லட்சம் மதிப்புள்ள காருக்கு ரூ.2 கோடியில் நம்பர் பிளேட் ஒன்று வாங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் விலையுயர்ந்த நம்பர் பிளேட்

உலகளவில் கார் மட்டுமல்லாது, தனித்துவமான அல்லது விருப்பமான எண் கொண்ட காரின் நம்பர் பிளேட்டையும் வாங்க பெரும் தொகையை சிலர் செலவிடுகின்றனர்.

இந்தியாவில் கடந்த ஆண்டு, ‘HR 88 B 8888’ என்ற நம்பர் பிளேட் ரூ.1.17 கோடிக்கு விற்கப்பட்டதே இந்தியாவில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட நம்பர் பிளேட் என்ற பெருமையை பெற்றது.

ரூ.6 லட்சம் காருக்கு ரூ.2 கோடியில் நம்பர் பிளேட் - வாங்கியது யார் தெரியுமா? | Andhra Man Buys India Expensive Car Number Plate

ஆனால், ஏலதாரர் பணம் செலுத்தத் தவறியதால் இறுதியில் ரத்து செய்யப்பட்டது. பின்னர், ரூ.26.7 லட்சத்திற்கு மறுவிற்பனை செய்யப்பட்டது.

தற்போது தொழிலதிபர் ஒருவர், ரூ.2.08 கோடிக்கு நம்பர் பிளேட் ஒன்றை வாங்கி, இந்தியாவின் விலையுயர்ந்த நம்பர் பிளேட் வாங்கியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

பயன்படுத்தப்பட்ட ஆடம்பர கார்களை விற்பனை செய்வதில் புகழ்பெற்ற நிறுவனமான பிக் பாய் டாய்ஸ் (BBT) தற்போது ஏலப் பிரிவையும் தொடங்கியுள்ளது.

கிரண் கொல்பகுலா

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த கிரண் கொல்பகுலா(Kiran Kolipakula) என்ற தொழிலதிபர், DDC 0001 என்ற நம்பர் பிளேட்டை ரூ.2.08 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளார்.

ddc 0001 number plate state price owner

இவர் தனது மாருதி சுசுகி இக்னிஸ்(Maruti Suzuki Ignis) காருக்காக இந்த விலை உயர்ந்த நம்பர் பிளேட்டை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை வெறும் ரூ.6 லட்சம் என கூறப்படுகிறது.

இந்த நம்பர் பிளேட்டின் முன்னாள் உரிமையாளர், BBT நிறுவனத்தின் நிறுவனர் ஜதின் அஹுஜா ஆவார்.

இந்த நிறுவனத்தின் ஏலப்பட்டியலில், ஷில்பா ஷெட்டியின் மெர்சிடிஸ்-மேபேக் GLS 600, இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் மெர்சிடிஸ்-பென்ஸ் CLA 200d மற்றும் தினேஷ் கார்த்திக்கின் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் SVR போன்ற ஆடம்பர வாகனங்களும் உள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *