அதிக பில்லியனர்கள் உள்ள நாடுகளின் பட்டியல் – இந்தியாவில் இத்தனை பேரா?

2 Min Read

2026 ஆம் ஆண்டில், உலகளவில் 2600க்கும் அதிகமான பில்லியனர்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

இதில், மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமானோர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

உலக மக்கள்தொகை மதிப்பாய்வு 2026 வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நாடு வாரியாக அதிக பில்லியனர்கள் உள்ள முதல் 10 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா

902 பில்லியனர்களுடன் அமெரிக்கா இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

அதிக பில்லியனர்கள் உள்ள நாடுகளின் பட்டியல் - இந்தியாவில் இத்தனை பேரா? | Top 10 Countries With Most Billionaires

அமெரிக்க பில்லியனர்களில் எலோன் மஸ்க் 768.4 பில்லியன் டொலர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

உலகின் முதல் 10 பணக்காரர்களில் 8 பேர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

சீனா

450 பில்லியனர்களுடன் சீனா இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

அதிக பில்லியனர்கள் உள்ள நாடுகளின் பட்டியல் - இந்தியாவில் இத்தனை பேரா? | Top 10 Countries With Most Billionaires

பைட் டான்ஸின் நிறுவனர் ஜாங் யிமிங், ஜாங் ஷான்ஷன் சீனாவின் பில்லியனர்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளனர்.

இந்தியா

205 பில்லியனர்களுடன் இந்தியா இந்த பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

அதிக பில்லியனர்கள் உள்ள நாடுகளின் பட்டியல் - இந்தியாவில் இத்தனை பேரா? | Top 10 Countries With Most Billionaires

இந்திய பில்லியனர்களில், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 101.3 பில்லியன் டொலருடன் முதலிடத்தில் உள்ளார்.

பல பாரம்பரிய நிறுவனங்களின் உரிமையாளர்களும், சில புதிய தொழிலதிபர்களும் இந்த பட்டியலில் உள்ளனர்.

ஜேர்மனி

171 பில்லியனர்களுடன் ஜேர்மனி இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

அதிக பில்லியனர்கள் உள்ள நாடுகளின் பட்டியல் - இந்தியாவில் இத்தனை பேரா? | Top 10 Countries With Most Billionaires

பல்பொருள் அங்காடிகளை இயக்கும் ஸ்வார்ஸ் குழுமத்தின் உரிமையாளர் Dieter Schwarz, ஜேர்மனி பில்லியனர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

ரஷ்யா

140 பில்லியனர்களுடன் ரஷ்யா இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

எண்ணெய், எரிவாயு, உலோகங்கள் மற்றும் சுரங்கம் உள்ளிட்ட எரிசக்தி மற்றும் வளங்களிலிருந்து பெரும்பாலான வருவாயை ரஷ்ய பில்லியனர்கள் ஈட்டுகின்றனர்.

கனடா

76 பில்லியனர்களுடன் கனடா இந்த பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

அதிக பில்லியனர்கள் உள்ள நாடுகளின் பட்டியல் - இந்தியாவில் இத்தனை பேரா? | Top 10 Countries With Most Billionaires

Binance இணை நிறுவனர் சாங்பெங் ஜாவோ, 88 பில்லியன் டொலருடன் கனடா பில்லியனர்களில் முதலிடத்தில் உள்ளார்.

இத்தாலி

அதிக பில்லியனர்கள் உள்ள நாடுகளின் பட்டியல் - இந்தியாவில் இத்தனை பேரா? | Top 10 Countries With Most Billionaires

74 பில்லியனர்களுடன் இத்தாலி இந்த பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

ஹாங்காங்

66 பில்லியனர்களுடன் இத்தாலி இந்த பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

பிரேசில்

56 பில்லியனர்களுடன் பிரேசில் இந்த பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

36.3 பில்லியன் டொலருடன், எட்வர்டோ சவேரின் பிரேசில் பில்லியனர்களில் முதலிடத்தில் உள்ளார்.

பிரித்தானியா

55 பில்லியனர்களுடன் பிரித்தானியா இந்த பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *